உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், வரும் 22ஆம் திகதி திறக்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவைக் காண பொதுமக்களை அனுமதிக்க வரும் 22 ஆம் திகதி பொது விடுமுறை அறிவிக்க கோரிகை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக கண்டிவாலி தொகுதி எம்.எல்.ஏ. அதுல் பட்கல்கர் தெரிவித்துள்ளார்.