செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் திதிகள் பற்றி அறிவோம்

திதிகள் பற்றி அறிவோம்

4 minutes read

ஒரு மாதத்தில் 30 திதிகள் வருகின்றன. இதில் அமாவாசை தொடங்கி வருகின்ற 15 திதிகள் வளர்பிறை திதிகள் ஆகும். பௌர்ணமி தொடங்கி வருகின்ற 15 திதிகள் தேய்பிறை திதிகள் ஆகும்.

இவை வளர்பிறை திதி(கிருஷ்ண பட்ஷம் ) தேய்பிறை திதி (சுக்கில பட்ஷம் )என இரண்டாகும்.

திதிகள்: பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி , பஞ்சமி, சப்தமி,அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகும்.

இவை வளர்பிறை தேய்பிறை இரண்டுக்கும் பொதுப்பெயராம்.இத்தகைய திதிக்கு ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர் அவர்களே நாளுக்கான பலன்களை நிர்ணயிக்கின்றனர். அவற்றை இப்போது காண்போம்.

பிரதமை திதி : இந்த திதிக்கு அதிபதி அக்னி பகவான் ஆவார். வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவாதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். வேள்விகள், ஹோமங்கள் செய்யலாம்.

துவிதியை திதி: இந்த திதிக்கு அதிபதி பிரம்மா அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம்.

திருதியை திதி : இந்த திதியின் அதிபதி கௌரி எனப்படும் பராசக்தி ஆவார். குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க தொடங்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அலங்கரித்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.

சதுர்த்தி திதி: இந்த திதிக்கு அதிபதிகள் எமதருமன், விநாயகப் பெருமான் ஆவர்கள் முற்காலத்தில் மன்னர்கள் பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.

பஞ்சமி திதி: இந்த திதிக்கு அதிபதி நாகதேவன் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள் ஆகின்றனர். எனவே நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி விசேஷ தன்மை கொண்ட திதியாகும்.

சஷ்டி திதி : இந்த திதிக்கு அதிபத்தி கார்த்திகேயன் எனப்படும் முருகப்பெருமான் ஆவார். சஷ்டி என்றால் ஆறு என்பது பொருள். ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நன்மைகள் ஏற்படும். நன்மக்கட் பேறு உண்டாகும். சிற்பம், வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம். புதிய ஆபரணங்கள் தயாரிக்கலாம். புது வாகனம் வாங்கலாம். புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

சப்தமி திதி: இந்த திதியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும். தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

அஷ்டமி திதி: இதன் அதி தேவதை ருத்திரன் எனப்படும் சிவ பெருமான் ஆவார். வீடு மற்றும் தங்களுக்கான அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கலாம். நாட்டியம் பயில்வதற்கும் சிறந்த திதியாகும்.

நவமி திதி: இந்த திதிக்கு அதிபதி அம்பிகை ஆவாள். எதிரிகள் பயத்தை போக்கும் திதி இது. தீமையான விடயங்கள் அனைத்தையும் ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபட சிறந்த திதி இது.

தசமி திதி: இந்தத் திதிக்கு அதிபதி எமதருமன் ஆவார். அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு மிகவும் ஏற்ற திதி இது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

ஏகாதசி திதி : இந்த திதிக்கு அதிபதி ருத்ரன் ஆவார். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

துவாதசி திதி : இந்த திதிக்கு அதிபதி விஷ்ணு பகவான் ஆவார். பொதுவாக மதச்சடங்குகளில் ஈடுபடவும், தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது.

திரயோதசி திதி : இந்த திதிக்கு அதிபதி மன்மதன் ஆவார். சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். விளையாட்டுகள், கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி திதி : இந்த திதிக்கு அதிபதி மகாசக்தியான காளி தேவி ஆவாள். எனவே புதிய ஆயுதங்கள் உருவாக்க, துஷ்ட சக்திகள், எதிரிகளை வெற்றி கொள்ள, தீயவற்றை ஒழிக்கும் மந்திரம் பயில ஆகிய செயல்களுக்கு ஏற்ற திதியாக இருக்கிறது.

பௌர்ணமி திதி : இந்த பௌர்ணமி திதிக்கு அதிபதி பராசக்தி ஆவாள். உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம். கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.

அமாவாசை திதி : அமாவாசை திதிக்கு அதிபதிகள் சிவன், சக்தி ஆகிய இருவரும் ஆவார்கள். பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்கள் செய்ய உகந்த திதி . ஈடுபடலாம். இயந்திரம் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் தொடங்கலாம்.

வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவைக்கும் தேய்பிறை காலத்தில் வருகிற துவிதியை, திருதியை, பஞ்சமி ஆகியவைக்கும் நல்ல காரியங்களை செய்யலாம்.

சோதிட நூற்தொகுப்பு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More