செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் துன்பங்கள் ஏன் விடாது துறத்துகிறது

துன்பங்கள் ஏன் விடாது துறத்துகிறது

1 minutes read

துன்பங்கள் நம்மை ஏன் விடாது துறத்துகிறது என்ற பெரிய கேள்வி நாம் அனைவர் மத்தியிலும் இருக்கத்தான் செய்கிறது .ஒருவன் துன்பப்படும் போது அவனது ஆழ்மனது அவனிடம்  ஒன்றை சொல்லும் நீ தான் எந்த கெட்டதையும் யாருக்கும் செய்யவில்லையே இருந்தும் ஏன் உனக்கு மட்டும் இந்த துன்பம் என்பதே ஆகும் அது .

இவ்வாறு தான் திரதராட்டிண்னுக்கு குருசேஷ்த்திர போரின் பின்  ஒரு கேள்வி எழுந்தது அப்போது அவ்ர்  கிருஷ்ணரிடம் இதே போன்று கேள்வியை கேட்கலானார்.என் கிருஷ்ணா நான் தான் யாருக்கும் எந்த துன்பத்தையும் செய்ய்யவில்லையே ஆனால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள் தொடர்கிறது.நான் என் கண்களை இழந்தேன் பின் என் 100 குழந்தையும் இழந்தேன் இத்தனை துன்பங்களை அடைய என்ன தவறு செய்தேன் கிருஷ்ணா என்கிறார்.

அதற்கு கிருஷ்ணர் ஒரு கதையை  சொல்லலானார்.”திரதராட்டினரே முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தார் அவருக்கு உணவு உண்பதில் பெரும் ஈடுபாடு இருந்தது. அவருடைய சமையல்காரன் சுவையான உணவுகளை செய்து கொடுத்தால் அவன் அதை மகிழ்ந்து உண்டுவிட்டு அவனுக்கு பரிசு பொருட்களை அதிகம் கொடுத்து வந்தார் இப்படி அரசனும் தனது சுவை மிக்க உணவுக்கு பணமும் பரிசும் தருவார் என்ற பேராசையில் சைவம் உண்டுவந்த அந்த அரசனுக்கு அசைவம் சமைக்கலானான் அவன் தடாகத்தில் 100 குஞ்சிகளுடன் வாழ்ந்து வந்த அன்னபட்சியின் குஞ்சிகளை தொடர்ச்சியா சமைத்து பரிமாறிக்கொண்டே இருந்தான் இதை அறியாது அசைவத்தை ருசித்து வந்தான் அரசன் மீண்டும் அந்த  உணவையே விரும்பி கேட்டார் அரசன்.

இப்போது சொல்லுங்கள் திரதராட்டினரே யார் இங்கு குற்றவாளி பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு இந்த உணவை சமைத்த சமையல்காரன் மற்றும் சைவ உணவை உண்டு வந்த போதும் அசைவ உணவுக்கு நா ருசியால் அடிமையாகி இந்த பாவகாரியத்துக்கு தூண்டுதலாக உள்ளார் என்று முடித்தார்.

எனவே கிருஷ்ணரும் நிச்சயம் திரதராட்டினரே!  இங்கே அந்த 100 அன்னகுஞ்சிகளும் இறக்க காரணம்   இருவர் பொறுப்பிலும் வருகின்றதல்லவா இங்கே அரசனாக பிறந்தவர் நீர் சமையல்காரனாக இருந்தது  உங்கள் மனைவி ஆவார் .

சைவம் உண்டு வந்த அரசனுக்கு அசைவ உணவை பிரித்து பார்க்க தெரியவில்லை என்றால் அவருக்கு எதற்கு கண்கள் எனவேதான் நீர் இந்த பிறப்பில் கண்களை இழந்து உம் 100 குழந்தைகளையும் இழந்தீர் என்றார் .

இப்படியாக அந்த கதை முடிகின்ற போதிலும் ஒருவரின் துன்ப நிலைக்கு காரணம் அவர் இந்த பிறப்பில் உத்தமனாய் வாழ்வது மட்டும் காரணமாக இருக்காது அவர் முற்பிறப்புகளும் காரணமாக அமையலாம் எனவே இந்த பிறவியில் நான் நல்லதை செய்தேன் எனக்கேன் இந்த நிலை என்று நோகாமல் மேலும் நன்மையை செய்து வர இருக்கும் எங்களின் கர்மாவில் இருந்து எங்களை காத்து கொள்ளலாம் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.