October 4, 2023 4:18 am

நிதானமாக இருங்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன் அவரை தனது மடாலயத்து குருவிடம் அழைத்து சென்ராறான். குரு  சொன்னார், அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள். உணவை, நீரில் அருகில் வையுங்கள் ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்”,என்றார். அவர் கத்துவார்,கற்களை வீசுவார். ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.

சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர். அந்த பைத்தியக்காரருக்கு எதிர் வினையாற்றுவது இல்லது போனது. நாட்கள் நகர்ந்தன ஒரு நாள் அமைதியாக குரு  முன் வந்த பைத்தியகாரன்,”எனக்கு தியானம் சொல்லி தருவீர்களா? என்று கேட்டான்.

இது இன்று திபெத்திய புத்தமடாலயங்களில்நடக்கும் சிகிச்சை முறை “எதிர்வினையாற்ற  யாருமில்லை என்றால் அவர் அமைதியாகி விடுவார் இது திபெத்திய லாமாக்கள் நம்பிக்கை மற்றவர்கள் பார்வை இல்லை என்றால் பைத்தியகார தானம் வளர்ந்து கொண்டே போகாது தர்க்கம் பண்ணாதீர்கள் நம்முடைய பேச்சே தர்கத்திற்கு தீனி நம் அமைதியே அதற்கு பட்டினி அமைதியாக இருங்கள் ,எல்லாம் சரியாகும் ஒரு வேலை சரியாக வில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் சரியாக இருப்பீர்கள், நிதானம் நிளமானது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்