அவுஸ்திரேலிய கால்பந்து அணியின் கோல் காப்பாளர் மிட்செல் லாங்கேரக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் கால்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மிட்செல்லுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிட்செல் விளையாடி வரும் ஜப்பான் கால்பந்து கழக அணியான நகோயா கிராம்பஸைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இதர வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மிட்செல்லும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
லாங்கேராக்கின் உடல் நிலை தற்போது நிலையான நிலையில் உள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நகோயா கிராம்பஸ் கழகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், 31 வயதான லாங்கேராக், ஜப்பானிய கழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளான இரண்டாவது வீரர் ஆனார்.
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாடிய மிட்செல், தனது நாட்டுக்காக 8 போட்டிகளில் விளையாடியுள்ளார்.