கால்பந்து போட்டிகள் தடைப்பட்டதால் 46 பில்லியன் டொலர்கள் இழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் நெருக்கடியால், உலகம் முழுவதும் கழகம் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் தடைபட்டதால், கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது. குறிப்பாக கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கழகஙகள் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

இந்த தொற்றுநோய் ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட கால்பந்து சங்கங்கள், கால்பந்தின் ஆளும் குழுவால் அமைக்கப்பட்ட 1.5 பில்லியன் டொலர்கள் அவசர நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி கோரியுள்ளன.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏறக்குறைய 6 மாதங்கள் கழக மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் தடைப்பட்டுள்ளன. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் இரசிகர்கள் இன்றியே போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஆசிரியர்