செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இளம் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இளம் வீரர்

1 minutes read

2022 ஆம் ஆண்டு டாட்டா இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கு இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் அணியை சேர்ந்த மதீஷா பத்திரன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Matheesha Pathirana prepares to send one down | Photo | Global |  ESPNcricinfo.com

சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவுக்குப் பதிலாகவே மதீஷா பத்திரன அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் ஆட்டத்தின் போது  மில்னேவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர்  மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக  தற்போது பத்திரன, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மதீஷா பத்திரன 2020 மற்றும் 2022 இல் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த இலங்கையின் இளம் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

இவர் தற்போது 20 இலட்சம் ரூபாய் இந்திய விலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் இணைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.