செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மீண்டும் சாதனை படைத்தனர்  கிளிநொச்சி மாணவர்கள்!

மீண்டும் சாதனை படைத்தனர்  கிளிநொச்சி மாணவர்கள்!

1 minutes read

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம்  மத்திய  கல்லூரியில்  நடைபெற்ற  வட மாகாண  பாடசாலைகளுக்கிடையிலான அனைத்து  வயது பிரிவினரையும்  உள்ளடக்கிய   பெண்களுக்கான மேசைப்பந்தாட்டப்  போட்டியில்  

1ம் இடம் டிலானி ஜெகதீஸ்வரன்,

2ம் இடம் டர்ஜிகா கங்கேஸ்வரன்,

3ம் இடம் தனுசிகா பாலகிருஷ்னன்.   அத்துடன் 20 அகவை  குழுப்  போட்டியில்  முதல் நிலை பெற்று கிளிநொச்சி மண்ணிற்கும், கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கும் பெருமை சேர்த்தனர். இவர்கள்  2017 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து விடா முயற்சி, தன்னம்பிக்கை, பெற்றோர்களின் முழுமையான ஆதரவு, வட மாகாண  விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டபடுகின்ற திறந்த  போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனுபவம், என்பன காரணமாக சாதித்துள்ளனர்.

அதே வேளை 18 அகவை குழுப்போட்டியில் 3ம் இடத்தையும், 16 அகவைப் பிரிவில் 2 ம் இடத்தையும்  கிளிநொச்சி  மகாவித்தியாலயம் பெற்றது.   

முழுமையாக  பார்க்கும்  போது  ஆண்கள் பிரிவிலும்,

1ம்_இடம்   சாந்தகுமார்  நிலக்சன்,  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம். 2ம் இடம் ஜோயல் பியசீலன் கவிநிலவன், கிளிநொச்சி  ம.வி. ஆண்கள் 18 அகவை  குழுப் போட்டி  2ம் இடம்  மத்திய மகாவித்தியாலயம்.

16 , 18 அகவை  ஆண்கள் பிரிவில்  கிளி ம.வி 3 ம் இடம். 

மேசைபந்தாட்டத்தில்  கிளிநொச்சி மாணவர்கள்  ஆதிக்கம்   செலுத்துவது,  கிளிநொச்சி  மாவட்டச்செயலக  மேசைப்பந்தாட்ட பயிற்சியாளராக இருப்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். இவ்வாறாக பயிற்சி பெற விரும்பும் வீரர்களும் மாவட்ட பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற முடியும். தேசிய மட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் வீரர்கள் ஊக்கப்படுத்த  பட வேண்டும். வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். அதிகமான போட்டிகள் கிளிநொச்சியில் நடாத்தப்பட வேண்டும். இது வேறு மாவட்டமாக இருந்திருந்தால், மாணவர்கள்  எவ்வாறெல்லாம்  கெளரவிக்கப்பட்டிருப்பார்கள். எத்தனையோ உதவி செய்யும் மனம் படைத்த கிளிநொச்சி மண்ணின் மைந்தர்கள் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள் இதனை சற்று கருத்தில் எடுத்து உள்ளக விளையாட்டையும் ஊக்கப்படுத்துங்கள். ஆதங்கத்தில்  கருத்துக்கள் வழங்கியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

நன்றி – முகநூல். கிளிநொச்சியின் பிரபல கணித ஆசிரியரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான குமார் ஆசிரியர் எழுதிய பதிவு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.