Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு பரி­மாறல்

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு பரி­மாறல்

1 minutes read

கபடி சுற்­றுப்­போட்­டி­யொன்றில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கு, கழி­வ­றையில் உணவை வைத்­தி­ருந்து பரி­மா­றிய சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து அதி­காரி ஒருவர் சேவை­ய­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தின் 16 வய­துக்­குட்­டோ­ருக்­கான கபடி சுற்­றுப்­போட்டி ஷாரன்பூர் நக­ரி­லுள்ள கலா­நிதி பி.ஆர். அம்­பேத்கார் அரங்கில் அண்­மையில் நடை­பெற்­றது. சுமார் 300 சிறு­வர்கள், சிறு­மி­யர்கள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றினர்.

இப்­போட்­டி­யா­ளர்­க­ளுக்­கான தங்­கு­மிடம், உண­வுக்­கான ஏற்­பா­டுகள் மேற்­படி அரங்­கி­லேயே செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால், சுகா­தா­ர­மின்மை மற்றும் தர­மற்ற உண­வுகள் குறித்து போட்­டி­யா­ளர்கள் முறைப்­பாடு செய்­துள்­ளனர் என உள்ளுர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

கழி­வ­றைக்குள் உணவுப் பாத்­தி­ரங்­களை வைத்­தி­ருந்து, அதி­லி­ருந்து போட்­டி­யா­ளர்­க­ளுக்கு உணவு பரி­மாறும் காட்­சிகள் அடங்­கிய வீடி­யோ­வொன்று சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெளி­யா­ன­தை­ய­டுத்து. இவ்­வி­டயம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

சிறு­மி­களும் சிறு­வர்­களும், கழி­வ­றைக்கு வந்து, அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த பாத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து உணவை எடுத்துச் செல்லும் காட்­சிகள் அவ்­வீ­டி­யோவில் இடம்­பெற்­றி­ருந்­தன.

இதை­ய­டுத்து உத்­த­ர­பி­ர­தேச அர­சாங்கம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துடன், ஷாரன்பூர் பிராந்­திய விளை­யாட்­டுத்­துறை அதி­காரி பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, குறித்த விளை­யாட்டுத் துறை அதி­கா­ரிகள் இது தொடர்­பாக கூறு­கையில், போட்­டி­களில் பங்­கு­பற்றும் அணிகள் முதல் நாளி­லேயே அரங்­குக்கு வந்­து­விட்­ட­தா­கவும், முதல் நாளில் எஞ்­சிய உணவை போட்­டி­யா­ளர்­க­ளுக்கு அடுத்த நாள் பரி­மாற வேண்டாம் என சமை­ய­லுக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு தான் பணிப்புரை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய உணவுடன் கலக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவே முதல் நாள் எஞ்சிய உணவு கழிவறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More