கிரிக்கெட்டை விட பெண்களிலே தான் சாமிகவிற்கு ஆர்வம் | பிரமோதய விக்கிரமசிங்க

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண கிரிக்கெட் விளையாடுவதை விட பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொகான் டி சில்வாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சாமிகருணாரட்ண பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ரி20 உலக கிண்ணப்போட்டிகளின் போது பயிற்சிகளை விட்டுவிட்டு அவர் பெண்நண்பர்களை தனது அறைக்கு அழைத்துச்சென்றார் என பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதம் ஏன் இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுவினர் சாமிக கருணாரட்ணவை அணியிலிருந்து நீக்க தீர்மானித்தனர் என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.

குறிப்பிட்ட கடிதம் உலக கிண்ணப்போட்டிகளின் போது காணப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து  குறிப்பிட்டுள்ளது.

கிரிக்கெட் மீதான சாமிகவின் அர்ப்பணிப்பு குறைவடைந்துவிட்டது அவரது கவனம் கவனத்தை திசைதிருப்பக்கூடிய தனிப்பட்ட விடயங்கள் குறித்தே காணப்பட்டது  என பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சி;ல்வர்வூட் சாமிக குறித்து நம்பிக்கை இழந்துவிட்டார். பல தடவைகள் சாமிக தலைமை பயிற்றுவிப்பாளருக்கு உண்மையாக இருக்க தவறிவிட்டார் எனவும் பிரமதோய விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பெண்களை சந்திப்பது குறித்தே சாமிக ஆர்வமாகயிருந்தார் பயிற்சிகளை புறக்கணித்தார். சாமிக  தனது அறைக்கு பெண்களை அழைத்துச்சென்றாரா என்பதை உறுதி செய்வதற்காக சிசிடிவி பதிவுகளை ஆராயவேண்டும் எனவும் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாமிக கருணாரட்ண ஹோட்டல் அறையில் விளக்குகளையும் ஊதுபத்தி குச்சிகளையும் கொழுத்தினார் அறையில் தீப்பிடித்திருந்தால் பெரும் அனர்த்தமாக மாறியிருக்கும் ஹோட்டல் பராமரிப்பாளர்கள் இதனை தெரிவித்தனர். 

அணி முகாமையாளர்கள் விளக்கு ஊதுபத்தி குச்சி போன்றவற்றை ஏற்றினால் அதனை அணைக்காமல் அறையிலிருந்து வெளியேற வேண்டாம் என அணி முகாமைத்துவம் எச்சரித்திருந்த போதிலும் சாமிக கருணாரட்ண இவ்வாறு நடந்துகொண்டார் என தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிற்காக சாமிகவை மீண்டும்  தெரிவுசெய்யும் போது  அதற்கு முன்னர் உளவியல் பரிசோதனைகளிற்கு உட்படுத்தவேண்டும் என பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்