June 7, 2023 7:07 am

ரபாயல் நடாலின் ஓய்வு திட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஸ்பெயினின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபாயல் நடால் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ள  தனது ஓய்வு திட்டம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

நடால் தமது 19 ஆண்டுகளில் முதன்முறையாகப் பிரஞ்ச் ஓபன் போட்டியில் விளையாடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார். இதற்கு  இடுப்புப் பகுதியில் காயத்தால் அவதியுறும்

அந்தப் போட்டியில் நடால் இதுவரை 14 முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அடுத்த ஆண்டு (2024) டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறவும் தமக்குத் திட்டமிருப்பதாக இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 36 வயது நடால் தெரிவித்தார்.

“இது எனது முடிவல்ல, என் உடல் எடுத்துள்ள முடிவு. பிரஞ்ச் ஓபன் போட்டியில் விளையாடுவது கடினம்” என நடால் பி.பி.சி தொலைக்காட்சிக்கு கூறினார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்