December 10, 2023 5:04 pm

சங்காவுக்கு கிடைத்துள்ள புதிய தலைமைத்துவம் !

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மெரில்போன் கிரிக்கெட் கழக (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

குமார் சங்கக்கார 2021 ஆம் ஆண்டு மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக பணியாற்றிய நிலையில், தற்போது உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே உலக கிரிக்கெட் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தற்போது இந்தக் குழுவில் குமார் தர்மசேனா, சௌரவ் கங்குலி, ஜூலன் கோஸ்வாமி, ஹீதர் நைட், சுசி பேட்ஸ், கிளேர் கானர், ஜஸ்டின் லாங்கர், இயன் மோர்கன், ரமீஸ் ராஜா, கிரேம் ஸ்மித் மற்றும் ரிக்கி ஸ்கெரிட் ஆகியோர் உள்ளனர்.

மார்க் நிக்கோலஸ் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுகிறார்.

இவர் ஹாம்ப்ஷயர் அணியின் முன்னாள் கேப்டனாகவும் மெரில்போன் கிரிக்கெட் கழக கிரிக்கெட்  சந்தைப்படுத்தல் மற்றும் சட்டங்கள் குழுவில் அங்கம் வகித்ததுடன் கிரிக்கெட்டின் ஸ்பிரிட் கொள்கையை உருவாக்கிய சிறிய உழைக்கும் கட்சியில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்