Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

9 minutes read

மொகல் ஈ ஆஸம் – திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் ( தோல்வி) கதை

இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட திரைப்பட  காதல் காட்சிகளில்  அதிகம் பேரால் தலை சிறந்தது என வர்ணிக்கப்பட்டது மொகல் ஈ ஆஸம் எனும் இந்திப் படத்தில்  வரும் காதல் காட்சிதான் இத்தனைக்கும் அந்த நீண்ட காட்சியில் வசனமே இல்லை வெறும் இசை மட்டும்தான் .நாயகி மதுபாலாவின்  முகத்தை கையில் வைத்திருக்கும் சாமரத்தால் தடவிக்கொண்டேயிருப்பார் . அவ்வளவுதான் . இவ்வளவு அழகான நுணுக்கமான ரசனைக்காட்சியை உருவாக்கிய கலைஞன் உண்மையில் ஒரு மகத்தான  காதலன் தான் . ஆம் இப் படத்தின் இயக்குனரான ஆசிப்ஃ அப்படிப்பட்ட ஒரு காலா நேசன் தான் . இல்லாவிட்டால் தன் வாழ்நாள் முழுமைக்கும் ஒரே ஒரு படத்துக்ககாக வாழ்ந்திருக்க முடியுமா ?

Madhubala dated Dilip Kumar, Prem Nath at once: New book- The New Indian  Express

இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட திரைப்பட  காதல் காட்சிகளில்  அதிகம் பேரால் தலை சிறந்தது என வர்ணிக்கப்பட்டது மொகல் ஈ ஆஸம் எனும் இந்திப் படத்தில்  வரும் காதல் காட்சிதான் இத்தனைக்கும் அந்த நீண்ட காட்சியில் வசனமே இல்லை வெறும் இசை மட்டும்தான் .நாயகி மதுபாலாவின்  முகத்தை கையில் வைத்திருக்கும் சாமரத்தால் தடவிக்கொண்டேயிருப்பார் . அவ்வளவுதான் . இவ்வளவு அழகான நுணுக்கமான ரசனைக்காட்சியை உருவாக்கிய கலைஞன் உண்மையில் ஒரு மகத்தான  காதலன் தான் . ஆம் இப் படத்தின் இயக்குனரான ஆசிப்ஃ அப்படிப்பட்ட ஒரு காலா நேசன் தான் . இல்லாவிட்டால் தன் வாழ்நாள் முழுமைக்கும் ஒரே ஒரு படத்துக்ககாக வாழ்ந்திருக்க முடியுமா ?

சில மகத்தான கலைகள் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கின்ற்ன என சொல்வார்கள் . மொகல் ஈ ஆஸாம் படம் இக்கூற்றுக்கு  நூற்றுக்கு நூறு பொருந்தக்கூடியது . இல்லாவிட்டால் இதுவரை இந்தியாவில் எடுத்த படங்களில்  பத்து வருடங்கள்  தயாரிப்பு காலத்தை எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பத்து வருடம் கழித்து வெளியாகி இந்தியாவின் மகத்தான சாதனைபடமாக இன்றும் வசூலில் ஷோலே  உட்பட பல இந்தி திரைப்படங்களைக்காட்டிலும் பண வீழ்ச்சி கணக்குப்படி  முன்னணியில் இருக்கிறதென்றால் அதன் சாதனையை எப்படி வர்ணிக்க முடியும் .

ஆசிப் இதற்கு முன்னாலும் பின்னாலும் ஒருதுண்டு துக்கடா படங்கள் எடுத்திருந்தாலும் அவரது பெரும்பாலான வாழ்க்கை இந்த ஒரு படத்துக்காக  மட்டுமே பெரும்பாலும் செலவழிக்கப்பட்டது  48 வயதில் மரணித்துபோன ஆசிப்புக்கு மூன்று மனைவிகள் . அதில் ஒரு வர் திலீப்குமாரின் சகோதரி

சரி விஷயத்துக்கு  வருவோம்

இந்த மகத்தான காதல் காவியம் உருவாக ஆசிப் மட்டும் தன் வாழ்க்கையை தொலைக்கவில்லை . ஒரு அற்புதமான காதலும்  இந்த படத்துக்காக தோன்றி மறைந்து போனது

அந்த காதலும்  படத்தில் வரும் சலீம் அனார்கலி காதல் போலத்தான் கடைசி வரை சேரவே முடியவில்லை . அந்த அசல்  காதல் கதையின் நாயகன் திலீப் குமார் நாயகி  மதுபாலா

மதுபாலாவின் கண்களைப்பற்றி இந்தியில் எழுதாத கவிஞர்களஏ இல்லை எனலாம் . 90 களில் ஒரு சினிமா பத்ரிக்கை எடுத்த வாக்குகளின் படி எல்லா காலத்துக்குமான இந்திய சினிமாவின் அழகு தேவதை யார் என போட்டி வைத்த போது அதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டவர்  மதுபாலா ,. அப்போது அவர் இறந்து 15 வருடங்களாகி விட்டிருந்தது  

அதுல்லா கான் எனும் பாகிஸ்தான் பத்தான் இஸ்லாமியரின்  ஒன்பதாவது பெண் தான் மதுபாலா .பிழைப்புதேடி மும்பைக்கு வந்த குடுமபத்தில் 11 குழந்தைகளில் சரிபாதி வறுமையில் விபத்தில் இறந்து போக அழகுமிகுந்த மதுபாலவை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தார் அதுல்லாகான்  .  ஊற்றுபொல உனர்ச்சிகளை பிரவகிக்கும் மதுபாலாவின் முகமும்  வெளிப்படையான சுதந்திரமான்  இயல்பும் அனைவரையும் வசீகிரித்துவிடுவதால் சினிமா வில் அவர் நுழைந்த வுடனே ஜெட் வேக வளர்ச்சிதான். குழந்தை  நட்சத்திரமாக சில படங்களில் நடித்த மதுபாலா 14 வயதில் ராஜ் கபூருடன் நாயகியாக நீல் கமல் படத்தில் நடித்தார்.  தொடர்ந்து பல காதல்கள்.  எல்லா காதலும்  கல்யாணம் வரை போய் மதம் காரணமாக அதுல்லாகான் ஒத்துக்கொள்ளவில்லை

இந்நிலையில் 17 வயதில் டாரானா படத்தின் செட்டில் மதுபாலா முதல் முறையாக  திலீப்குமார் எனும் உச்ச நட்சத்திரத்தை பார்த்தார்  கொஞ்ச நாட்களில் இருவருக்குமிடையே காதல் முதல் பார்வையிலேயே பற்றிக்கொண்டது .  ஒரு ரோஜாப்பூவுடன் ஒரு கடிதத்தையும் திலிப்பின் மேக் அப் அறைக்கு கொடுத்தனுப்பி காதலை வெளிப்படுத்தினார் மதுபாலா . இருவருமே பத்தான் முஸ்லீம்கள் என்பதால் துவக்கத்தில் அதுல்லாகான் அவர்கள் காதலுக்கு தடை சொல்ல வில்லை. அதே கான் பிற்பாடு இந்த காதலுக்கு கொலை வெறி வில்லனாக மாறி இருவரையும் கடைசி வரைக்கும் சேர விடாமல் பிரித்து  மதுபாலவின்  மரணம் வரை கொண்டுசென்றார்

காரணம் இரண்டெழுத்து \

ஈகோ

மதம் அபின் என்றால் ஈகோ அபினை விட கொடியது

அந்த ஈகோ வரக்காரணம்  பின் வரும் கதையை படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்

இயக்குனர்  ஆசிப் ஒரு கலை வெறியர் . சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப் போகாமல் மகத்தான சாதனை செய்ய பெரும் கனவு கண்டார் . அது மொகல் ஈ ஆஸம்  திரைப்படம் .

வரலாற்றுப்பின்னனீயில் ஒரு மகத்தான காதல் கதை  அக்பர் மகன் சலீமுக்கும் அனார்கலிக்கும் நடந்த காதல் கதை

இந்த கதைக்கான  திரைக்கதை எழுதும்போதே இதுவே இந்தியாவின் சிறந்த வணிக படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்  இதுவே தன் வாழ்நாளின் சாத்னை என்றும் முடிவுறுத்துக்கொண்டார் . அது அப்படியே ஆகவும் செய்தது . ஆனால் அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

பெரும் கனவுகளோடு மொகல் ஈ ஆசாம் படத்தை பெரும் பொருட்செலவில் துவக்கியிருந்தார் . ஏற்கனவே அது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி  வேறு நட்சத்திரங்கள் போட்டு படபிடிப்பு ஆரம்பித்து பின் ஏதேதோ தடைகளால் நடத்த முடியமால் போனது கடைசியாக அவர் திரைக்கதை தில்லிப்பின் கைகளுக்கு வந்தது . தொடர்ந்து அது  மதுபாலா கைகளுக்கும் சென்றது . இருவரது இதயமும் அந்த திரைக்கதையின்  அபாரத்தில் விழுந்தது.

ஒரு வழியாக ஆசிப்பின் கனவுப்படத்து கை கல் முளைத்தது

படப்பிடிப்பும் துவங்கியது . தொடர்ந்து சில நாட்கள்   வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் போதுதான்   இன்னொரு படமும் இதே ஜோடிக்கு  ஒப்பந்தம் ஆகியது அது தான் நயாதர் .. இந்த படம் தான்  எல்லா பிர்ச்னைக்கும் துவக்கப்புள்ளியானது . ஏற்கனவே இருவரது காதலையும் அறிந்த அதுல்லாகானுக்கு ஒரு பயம் இருந்தது காரணம் வீட்டின் ஒரு வருமானம் மதுபாலாதான் அவள் முந்திய காதல்களுக்கு மதம் கார்ணம் காட்டி தடுத்து விட்டார். .ஆனால் இதில் திலீப்பும் அவர்களைப்போலவே பதான் வகுப்பு முஸ்லீம் . காதலித்தால் தடை சொல்ல முடியாது கூடுமானவரை நெருங்கமால் கண்காணித்தால் சரி என்ற முடிவில் இருந்தார் .படப்பிடிப்பு முழுக்க மும்பைதானே என கேட்க இயக்குனர் பி ஆர் சோப்ராவோ முதலில்  ஆமாம் என சொல்ல முதலில்  ஒத்துக்கொண்டார்  ஆனால் பி ஆர் சோப்ராவுக்கோ மும்பையில் லொக்கேஷன் அமையவில்லை   படப்பிடிப்பை மத்திய பிரதேசம் குவாலியரில் நடத்த திட்டமிட்டுவிட்டார் .

இதனிடையே மொத்த குழுவும்  படப்பிடிப்புக்குப்போய்விட்டது .மறுநாள் வரவேண்டிய மதுபாலா மட்டும் வரவில்லை. பி ஆர் சோப்ரா வுக்கு கடும் கோபம்  . விசாரித்த போது இன்னொரு படப்பிடிப்புக்கு போய்விட்டதகா தெரியவர படத்திலிருந்து மதுபலாவை உடனே நீக்கிவிட்டு வைஜயந்தி மாலாவை ஒப்பந்தம் செய்து உடனெ ஸ்பாட்டுக்கு வரவழைத்து  விட்டார் ..

இது அதுல்லாகனின் ஈகோஒவை உசுப்பிவிட பி ஆர் சோப்ராமீது வழக்கு போடுவேன் என பேட்டிகொடுக்க சோப்ரா உண்மையிலேயே மதுபாலா மீதும் அவர் தந்தை மீதும் வழக்கை போட்டுவிட்டார் வழக்கு கொர்ட்டுக்கு வந்தது . இப்போது அதுல்லாகானுக்கோ  திலீப் மகளின் காதலர் அதனால் தனக்கு சாதகமாக பேசுவார் என எதிர்பார்த்திருப்பார் போலிருகிறது . ஆனால்நேர்மையும் பிடிவாத குணமும் கொண்ட திலீப் கோர்ட்டில் பேசும்போது சொன்ன வார்த்தைகள் தான் இலக்கியம்

நான் மதுபாலாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் அது எவ்வளவு உண்மையோ அது போல இதில் அதுல்லாகான் படபிடிப்புக்கு ஒத்துக்கொண்டு பணம் வாங்கியதும் வராததும் குற்றம்  என பகிரங்கமாக சொல்லிவிட  அதுல்லாகனுக்கு அதிர்ச்சி

பிற்பாடு இந்த வழக்கல மதுபலாவுக்கு பிரச்னை வரும் என தெரிந்தவுடன் திலீப் வேண்டுகோளின் பேரில் அந்த வழக்கை பி ஆர் சோப்ரா வாபஸ் வாங்கிக்கொண்டார்

ஆனாலும் இது அதுல்லாகானுக்கு பயங்கரமான அதிர்ச்சியையும் அவமானத்தையும் கொடுத்துவிட்டது .

பத்தான் முஸ்லீம்களுக்கே உரிய ஈகொ வும் பிடிவாதமும் அதுல்லாகானை உசுப்பி விட்டது . திலிப்பை பழி வாங்க முடிவெடுத்தார்

தன்னிடமிருந்த  ஒரே ஆயுதம் மகள் மதுபலா.

அவருக்கு தெரியும் மதுபாலாவும் திலீப்பும் மீண்டும் சந்தித்துக்கொண்டால் அவர்கள் திரும்பவும் காதலித்துவிடுவார்கள் மகளைத்தான்  பிரியவேண்டியதிலிருக்கும் அதனால் இனி மகளை திலீபின் கண்களுக்கே காட்டக்கூடாது என முடிவெடுத்தார்

இந்த இருவர் பிரச்னையில் சிக்கியவர் ஆசிப் தான் முகல் ஈ ஆசாம் அவருடைய  மிகப்பெரிய கனவு . அதை மட்டும் உருவாக்கிவிட்டு இறந்தும் கூட போகலாம் என்பது அவருடைய எண்ணம் அப்படித்தான் நடக்கவும் செய்தது . அந்த ஒரு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவர் பதினெட்டு வருடம் உயிர் வாழ்ந்து இன்னொரு படம் எடுக்கமாலேயே உயிரிழந்தார்

அதனால் கனவை நிறைவேற்றவேண்டி மதுபலாவின் தந்தையிடம் நடையாக நடந்தார் அதுல்லாகான்  பிடிவாதமாக மறுத்துவிட்டார் . இனி என் மகள் திலீப்குமாருடன் நடிக்கமாட்டார் நீங்கள் வேறு நாயகியை வைத்து படமெடுங்கள் என முகத்திலடித்தார் போல கூறிவிட்டார் . ஆனால் ஆசிப்புக்கொ பெரிய ப்ரசனை மீண்டும் அப்படி ஒரு செட் போட்டு திரும்ப எடுக்க முடியாது . இன்னும் குறைவான நாட்கள் தான் அதனால் எவ்வளவோ கெஞ்சினார் ஆண்டுகள் ஓடின மதுபலா பல படங்கலீல் நடித்தார் ஆனல் மொகல் ஈ ஆசமுக்கு மட்டும்  கால் ஷீட் கொடுக்கவில்லை

ஆறேழு வருடங்கள் இயக்குனர் ஆசீப் நடையாக நடந்தார். இறுதியில்  அதுல்லாகான் மனம் மாறினார். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டார் . இருவரும் நேருக்கு.நேர்.பார்க்கவே கூடாது என சத்தியம்  கேட்ட்டார் . ஆனால் படத்தில் பல காட்சிகள் அப்படி இருந்தன ஆனாலும் வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து ஒத்துக்கொண்டார்.

 மதுபாலாவுடன் படப்பிடிப்புக்கு வந்தார்.  அவருக்கும் திலீப்பை பார்க்கும் ஆவல். அப்பாவின் த்டைக்கு கட்டுப்ப்ட்டாலும் அவரிடம் அந்த காதல் அப்படியே இருந்தது .   பல நாட்கள் கழித்து பார்க்கப்போகும் எதிர்பார்ப்பு அது போல திலீப்புக்கும்  உள் மனதில் பல வித ஏக்கங்கள்

படபிடிப்பின் வெவ்வேறு இடங்களில் இருவரும் தனித்தனியாக அறையில் காத்திருந்த்னர் . அதுவரை மற்ற காட்சிகள் எல்லாம் இருவரையும் தனித்தனியாக எடுத்துவிட்ட ஆசாஇப் ஒரு காட்சியை மட்டும் அவரால் அப்படி எடுக்க முடியவில்லை. அது மதுபாலாவை திலீப் குமார் அறையும் காட்சி.  அதுல்லாகானிடம் எப்படியோ  அனுமதியும் வாங்கிவிட்டார் ஆசீப் .

இருவரும் வரவழைக்கப்பட்டனர் உண்மையில் அவர்கள் அந்த கணத்தை எதிர்பார்த்து என்னன்னவோ கனவுகள் கண்டிருக்ககூடும்  மனதுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்ககூடும் . ஆனால் படப்பிடிப்பில் பலர் மத்தியில் தாங்கள் அப்படியில்லை என காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயம்  நெருக்கடி. திலீப் எப்போதுமே உணர்ச்சியை கட்டுக்குள் வைத்திருப்ப்வர் . அவர் நடிப்பே அவர் குணம் .ஒரு மில்லிமீட்டர் கூட அளவுமாறாமல்கட்டுக்கோப்பாக உடலில் நடிப்பை வெளிப்படுத்தும் பண்பட்ட நடிகர் . ஆனால் அன்று அந்த காட்சியில் அவர்முற்றாக நிலையிழந்தார் . மதுபாலா அவரை பொருட்படுத்தாத தோற்றம் பாவனை அவரை கோபபப்டுத்தியிருக்க வேண்டும் . அடிக்கும் டேக் இருவரும் எதிரெதிர் நிறுத்தப்பட காமிரா ஆனானது அடுத்த  நொடி மதுபாலா தரையில் விழுந்தார் அறை அவ்வளவு  உக்கிரமாக மதுபாலாவின் கன்னத்தில் விழுந்ததுதான் காரணம்

தகவல் கேள்விப்பட்டு அதுல்லாகான் ஆசிப்பை கடிந்துகொண்டாலும் ஒருபக்கம் மகிழ்ச்சி மகள் இனி திலீப்பை நிரந்தரமாக  வெறிக்கப்போகிறாள் என நினைத்தார்

இந்த இடைப்பட்ட நாட்களில் மதுபாலாவுக்கு காச நோய் பீடித்தது. 1948ல் துவங்கியபடப்பிடிப்பு 1960ல் தான் முடிந்து ரிலீஸ் ஆகியது.  இந்தியாவில் அதிக வருடங்கள்  தயாரான ஒரே படம் இதுதான்.  ஆசிபின் உழைப்பு வீண் போகவில்லை இந்தியாவின் முதல் பிரம்மாண்ட வெற்றிப்படம் என பேர்வாங்கியது. இதன் சாதனை 15 வருடம் கழித்து ஷோலே தான் முறியடித்தது. இன்றுவரையும்.இந்தியவிண் மிகச்சிறந்த காதல் படம் இது தான் அது போல இந்தியில் இதுவரை வந்த படங்களில் அனைவராலும் சிறந்தபடம் என ஏகமனதாக போற்றப்படும் படமும் இது மட்டும் தான் படம்  ரிலீசான.சில நாளில் மதுபாலாவின் அப்பா இறந்தார் . என்ன காரணமோ மதுபாலா பிற்பாடு பாடகர் கிஷோர்குமாரின் நான் காவது மனைவியாக திருமணம் செய்து சில வருடங்களில் இறந்தும்.போனார். அது வரை கல்யாணம் செய்யாத பேச்சிலராகவே 45வயது வரை வாழ்ந்த  திலீப் சாய்ராபானுவை  திருமணம் செய்துகொண்டார் 97 வயதிலும் இன்றும் காதலனாக வாழ்ந்து வருகிறார்.

அயன்பாலா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More