Tuesday, March 9, 2021

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் "நகர வாழ்க்கையே சிறந்தது" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...

ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? | நிலாந்தன்

கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்

கல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...

பொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன? | நிலாந்தன்

பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...

அதிமுகவா? திமுகவா? | வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நேற்று அலுவலகத்தில் தேநீர் இடைவேளை நேரத்தில் சக பணியாளர் ஒருவரிடம், யாருக்கு ஓட்டுப்போடுவிங்க என்று கேட்டபோது, யாருக்கு போடுறதுன்னுல்லாம் பாக்கல, எனக்கு திமுக வரக்கூடாதுங்கறது தான் ஒரே குறிக்கோள் என்றார்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 23 | பத்மநாபன் மகாலிங்கம்

வட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம். Jaffna Central College.... யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி..... 1816 ஆம் ஆண்டளவிலும்

ஆசிரியர்

திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்! | சி. மௌனகுரு

Image may contain: text that says '報 In நூலகம்'

திரைக் கலைஞர் பாலு மகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர் நூலகமும் பயிற்சிக் கூடமும்

Image may contain: 1 person, text that says '長 பாலு மகேந்திரா நூலகம் றப்பு விழா திறப்பு விழா திறபப Tവ്ിര மபma விழா திறப்பு விழா திறப்பு விழா திறப்பு விழா திறப்பு சிறப்பு அதிதி சி. மௌனகுரு நாடகத்துறைப் பேராசிரியர் f காலம் 27.12. 2020 இணைய வாயிலாக மாலை முதல்8 மணிவரை'

ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஓர் அழைப்பும் விடுத்தனர்

“நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்”

சரி என ஒப்புக்கொண்டேன்

பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் அண்ணன் எனவே அழைப்போம்.

எனது 10 வயதிலிருந்து 15 வருடங்கள் தொடர்ச்சியாக அவருடனான நெருக்க உறவு இருந்தது

அவர் தந்தையார் பாலநாதன் புகழ் பெற்ற கணித ஆசிரியர்

தந்தையின் பெயரைத் தன்னுடன் இணைத்து பாலு மகேந்திரா என்பெயர் வைத்துகொண்டார் மகேந்திரன்.

பின்னாளில் இந்த பாலுமகேந்திரா எனும் பெயரே நிலைத்து விட்டது

அவரது உறவினர்கள் இன்றும் என் அருகில் வசிக்கிறார்கள்

மகேந்திரன் அண்ணா என்றே சிறு வயதில் அவரை நான் அழைப்பேன்

Image may contain: 8 people

மகேந்திரன் அண்ணா என்றே சிறு வயதில் அவரை நான் அழைப்பேன்

அடிக்கடி மகேந்திர அண்ணர் வீடு செல்வேன்

அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிக்க வயது அது

அவர் தனது தோற்றத்தாலும், பேச்சாலும், செயற்பாடுகளாலும் எம்மை மிகவும் கவர்ந்தார்.

தரமான கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவர் அவர்.

அவர் சிந்தனைகள் எம்மீதும் தாக்கம் செலுத்தின

அவரோடு உரையாடிய நாட்கள்,

அவரது கலைத் துறை ஆசைகள்

அவரது கலைப் பெரு வெறி

கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவரது அதீத வெறிக் குணம்

எமது சிறு வயதில் அந்த வெறியினை எமக்கும் ஊட்டியமை

அவர் இளவயது மனப்போக்கு

அவரது குசும்புத்தனம்,

அவரது ஊர் அனுபவங்கள்

அனைத்தையும்

சிறுவனாகவும் வாலிபனாகவும்

அருகிலிருந்து பார்த்த அந்த ஞாபகங்கள் வந்தன

Image may contain: 1 person, indoor

அருகிலிருந்து பார்த்த அந்த ஞாபகங்கள் வந்தன

இளசுகள் ஆகிய இந்த இளம் தலை முறையினர் ஆர்வம் காரணமாக ஒரு சிறு வீட்டில் ஓர் நூல் நிலையம் ஆரம்பிக்கிறார்கள் என எண்ணிய ஒப்புதல் தந்த எனக்கு

அக்கலையகம் பற்றி அதன் தலைவர் ரம்மியா காட்சிகளுடன் நடத்திய அழகான அறிமுக உரையும்

அதனூடாக வெளிப்பட்ட அக்கலையகத்தின் அமைப்பும்

அங்கிருக்கும் நூல்கள் வீடிஓக்கள் பற்றிய தகவல்களும்

பெரு வியப்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தன

27.12 2020 இந்நூலகத் திறப்பு விழா நடந்தேறியது

பலர் இணைய மூலம் இணைந்து கொண்டனர்

உலகப்பிரசித்தி பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனராகிய மஜீத் மஜீதி அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்

கனடா, ஐக்கியராச்சியம், இந்தியா, இலங்கை இருந்து பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்

Image may contain: people sitting, table and indoor

கனடா, ஐக்கியராச்சியம், இந்தியா, இலங்கை இருந்து பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்

அந்நூல் நிலையத்தில் 10 000 க்கு மேற்பட்ட திரைப்பட இறுவட்டுகளும்

பாலேந்திரா சேகரிப்பில் இருந்து அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த 2000 இறு வட்டுகளுமாக

மொத்தம் 12000 க்கு மேற்பட்ட இறுவட்டுகள் இருக்கின்றன என அறிகிறேன்

அத்தோடு பாலுமகேந்திரா குடும்பம் அளித்த அவர் வீட்டில் இருந்த 750 சினிமா சம்பந்தமான நூல்களும்

No photo description available.

அத்தோடு பாலுமகேந்திரா குடும்பம் அளித்த அவர் வீட்டில் இருந்த 750 சினிமா சம்பந்தமான நூல்களும்

ஈழத்து எழுத்தாளர்களின் 700க்கு மேற்பட்ட நூல்களும் அங்கு இருக்கின்றன என ரம்மியா கூறினார்

இப்படி அதிகளவு இறுவட்டுகள் கொண்ட நூல் நிலையம் இலங்கையில் எங்கும் இல்லையென நினைக்கிறேன்

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.

Image may contain: screen and indoor

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.

அவர்கள் செயல் திட்டங்கள் அவர்களின்

அதீத ஆசையை பெரும் கனவுகளைக் காட்டின.

பல வகைகளில் இது எனக்கு ஓர் முக்கிய செயற்பாடக முன்னெடுப்பாக எனக்குப்பட்டது

அவையாவன

1. மட்டக்களப்பிலே ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பாலு மகேந்திராவுக்கு, வன்னியில் கிளிநொச்சி எனும் கிராம நகரத்தில் ஓர் நினைவாலயமும் நூல் நிலையமும் அமைக்கப்படுவது

முக்கியமாக இக்காலகட்டச் சூழலில் வரவேற்கப்பட வேண்டிய மிகவும் ஓர் முக்கிய அம்சம்

2. இதனை ஒழுங்கு செய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் ஊடக வியல் . திரைப்பட அறிமுகம் பயின்று வெளியேறிவர்கள் அதிலும் மிகவும் இளம் தலை முறையினர் அதிலும் முக்கியமாகப் பெண்கள்

3. இந்த ஆரம்பவிழாவுக்கு அவர்கள் ஈரானிய திரைப்பட நெறியாளர் மஜீத் மஜீதி , சிங்கள திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதான, தமிழ் திரைப்பட பட நெறியாளர் பாரதிராஜா போன்றோரையும்

4. உள்நாட்டின் திரைப்படத் துறையில் ஈடுபடும் ஞானதாஸ், சோமீதரன் விரிவுரையாளார் கலாநிதி ரகுராம் போன்றோரையும்

அப்துல் ஹமீட், தாஸீசியஸ், தம்பிஐயா தேவதாஸ் போன்றோரையும்

இன்னும் சிலரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தும் இருந்தனர். இது அவர்களின் இன மொழி நாடு கடந்த மிகப் பரந்த மனப்பான்மைக்கு அடையாளம்

5. நேற்று இணைய கருத்தரங்கில் இணைய வந்திருந்தோரிடையே

80 வயதை அண்மிக்கும் முது வயதுக் கலைஞர்களும்,

50 வயதினரான நடுவயதுக் கலைஞர்களும்

20 வயதினரான இளவயதுக் கலைஞர்களும் காணப்பட்டனர்.

இந்த தலைமுறை சங்கமம் இக்காலகட்டத்தில் மிக மிக முக்கியமானது.

முது வயதினரிடமிருந்தும் நடு வயதினரிடமிருந்தும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இதனை ஒழுங்கு செய்த இளம் தலை முறையினர் மேலே பயணம் செய்ய ஆயத்தமாக இருந்தனர் என்பதனை இக் காலசங்கமம் காட்டியது

இவையாவற்றையும் கூறி பாலு மகேந்திராவின் இளவயது அனுபவங்களும், பாலிய வயது அனுபவங்களும் எவ்வாறு அவர் படங்களில் வெளிப்பட்டது என ஓரிரு உதரணம் காட்டினேன்

,

கலைஞனை என்றும் இயக்குவது அவனது இந்த ஆழ்மன அனுபவங்களே

பாலு மகேந்திராவின் தந்தையார் பாலநாதன் ஒர் கல் வீடு கட்ட எடுத்த சிரமம் துயரம் துன்பம் அலைச்சல் என்பன இளம் பாலு மகேந்திராவின் அடி மனதில் ஆழப்பதிந்த ஒன்று

அந்த ஆழ்மன அனுபவமே அவரது வீடு திரைப்படமானது

எமது இருவரின் ஊரான அமிர்தகளி அங்கிருக்கும் மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் அதனது குளம் என்பன பிரசித்தமானவை

அந்த மாமாங்கபிள்ளையார் மாமாங்கக் குளத்தில் ஒருவர் மூழ்கி இறந்து விட்டார்,,அவரது உடல் வெளியே கிடத்தப்பட்டு இருந்தது

அதனை பார்க்க ஊரே கூடியது

மகேந்திர அண்ணரும் அதனை காண ஓடோடி வந்தார்

அந்த உடலும் சூழலும் ஊரின் அழுகையும் அவர் மனதில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவ்வுடலை அவரும் நானும் சென்று அருகே இருந்து பார்த்தோம் அந்த சோகம் எம்மைக் கௌவியது

“எத்தனை கனவுகளுடன் இவர் இருந்திருப்பார்

என அவர் கவலையுடன் கேட்டமையும் ஞாபகம் வருகிறது’

அந்த அனுபவமும்

மகேந்திர அண்ணரின் பாடசாலைப் பருவச் சேட்டைகளும் அழியாத கோலம் எனும் திரைப்படத்தில் அழகாக வெளிப்பட்டது

அவரது இளம் வாழ்வில் அவரது வாலிப வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள் அதன் காரணமாக எழுந்த ஆண் பெண் உறவுகள் – முரண் பாடுகள் என்பன அவரது பல படங்களில் வெளிப்பட்டன

அவற்றை அவரது படங்களோடு இணைத்துப் பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும்

அவர் மிக மென்மையானவ்ர்

மெல்லுணர்வுகள் கொண்டவர்

நேர்மையானவர்

.தன்னை எப்போதும் விமர்சித்துகொண்டு வாழ்ந்தவர்

சந்தியா ராகத்தில் சொக்கலிங்க பாகவதரை வாகன நெருக்கடி சூழலில் நடக்கவைத்து வருத்தியதையும் அதனால் தன் மனம் மிக வருந்தியதையும் அவர் கூறியுள்ளார்

தன்னையே விமர்சிக்கும் குணம் அது

அவர் ஓர் இலக்கிய ஆர்வலர்,

சிறுகதை ஆசிரியர்,

இலக்கியப்பத்திரிகை ஆசிரியர்,

கவிஞர்

,திரைப்பட எழுத்தாளர்

படப்பிடிப்பாளார்

சிறந்த வாசகர்.

சிந்தனையாளர்

என பல திறன்கள் கொண்டவர்

இப்பல் திறன் ஆற்றலே அவரை அவர் துறையில் பலரும் வியக்கும் மனிதராக்கியது

தனது வேகத்திற்கு இலங்கையில் இடம் இல்லை எனவும் திரைப்படத் துறையில் அதிகம் அறிய வேண்டும் எனவும் எண்ணிய அவர் இலங்கை விட்டகன்றார்,

வெளி நாட்டில்பட்டம் பெற்றார், பூனா திரைபடக் கல்லூரியில் முறையாக திரைப்படம் பயின்றார் அத் துறையில் தொழிநுட்பத் தேர்ச்சி பெற்ற பின்னரேயே அத் துறையில் இறங்கினார்

இந்த திறமைகள், அர்ப்பணிப்பு ,தேடல், ஈடுபாடு அவரிடமிருந்து இன்று சினிமா செய்யப் புறப்படும் இளம்தலைமுறை கற்க வேண்டியவை

அவர் ஒரு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய படம் ஒரு மலையாளப்படம் அதனை செய்தவர் செம்மீன் புகழ் ராமுகரியத்.

அவரின் நெல்லு எனும் படம் வெளி வந்தது 1972 ஆம் ஆண்டில் அப்போது பாலு மகேந்திராவுக்கு வயது 31

அவருக்கு தெலுங்கு சங்கராபரணம் பெரும் புகழ் தந்தது

அவர் முதல் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப் படம்

முள்ளும் மலரும் . அதில் நாயகன் ரஜனிகாந்த் அதன் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன,

இயற்கை ஒளியையே அதில் அவர் அதிகம் பாவித்தார். இயற்கையை விட வேறு என்ன ஒளி இருக்கிறது என்பார்

இது வந்தது 1977 இல்

அப்போது பாலு மகேந்திராவுக்கு வயது 38

அவரது அழியாத கோலங்கள் திரைப்படம் 1978 இல் வருகிறது

அப்போது பாலு மகேந்திராவுக்கு வயது 39

அவரது முதிர் சிந்தனைகளை பிரதிபலிக்கும்

வீடு ( 1988)

சந்தியா ராகம் ( 1990)

போன்ற படங்கள் பின்னால் வருகின்றன

தன் காலத்துக்குள் பல மாற்றங்களைக் கண்டவர் அவர்

தமிழர் சமூக அமைப்பில்

அரசியலில் போராட்டங்களில்

பொருளாதாரம் மாறியதில்

தொழில் நுட்ப முன்னேற்றத்தில்

எல்லாம் தீவிர மாற்றங்களைக்கண்டார்

அவற்றைப் புரிந்து கொண்டார் உள் வாங்கிக் கொண்டார்

இவற்றையெல்லம் உள்வாங்கி வளர்ந்த அவர் கடைசியாக நடித்த படம்

தலைமுறைகள்

தாத்தா பேரன் உறவுக் கதை அது

அழியாத கோலங்களில் விடலை பெடியனாக உலகை பார்த்த அவர் தலைமுறைகளில் 70 வயது கடந்த தாத்தாவாக உலகைப்பார்க்கிறார்

இப்பார்வைகளை அவருக்கு அவரது உலக அனுபவமும் நூல் வாசிப்பும் அளித்துள்ளன

ஆரம்பத்தில் இலங்கைச் சினிமா உலகும் பின்னர் தென்னிந்திய திரைப்பட உலகும் கவனிக்காது விடப்பட்ட இவரே பின்னால் கொண்டாடவும் பட்டார்

அத்தோடு திரைப்படத் துறையில்

4 தேசிய விருதும்

3 மாநில விருதும்

2 பிலிம் பேர் விருதும்

2 நந்தி விருதும்

பெற்றார்

அவர் ஓர் தலை முறையையும் உருவாக்கியுள்ளார்

இயக்குனர் பாலா

ஓளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள்

அதன் பின்னால் அவரின் வழியில் இன்று பலர் உருவாகியுள்ளார்கள்

மகேந்திர அண்ணரை நான் நீண்ட நாட்களுக்குபிறகு 1998 இல் சென்னையில் சந்திக்கிறேன்

, மிக மிக நீண்ட நாட்களின் பின் ஏறத்தாள 35 வருடங்களின் பின்

அது ஓர் அற்புதமான உணர்ச்சிகரமான சந்திப்பு

சில நிமிட நேரம் அவரது அணைப்புள் நான் உட்பட்டேன்.

பழைய நினைவுகளை மீட்டினோம்

ஊரின் ஓவ்வொரு இடத்தையும் கேட்டார்

ஊரின் புற்கள் இலைகள் நதிகள் மரங்களை நுணுக்கம் நுணுக்கமாகக் கேட்டார்

இந்தப் பின்னணியில் அவரது பழைய நண்பர்களை அவர்களின் இன்றைய வாழ் நிலைமைகளை இன்னும் நுணுக்கம் நுணுக்குமாக வினவினார்

மிகத் தேர்ந்த அனுபவம் மிக்க கமராக் கண்ணின் கேள்விகள் அவை

அவர் எல்லாவற்றையும் அந்த கமராக் கண் கொண்டே பார்த்தார்

அவரது படங்களில் இயற்கையும் மனித உணர்வுகளும் இடம் பெறுவதன் காரணம் எனக்கு நன்கு புரியலாயிற்று

அவரிடமிருந்து இளம் தலைமுறை கற்க வேண்டியவை இவை

1. சுய கற்றல் ( இது அவரது 5 வயது தொடக்கம் 15 வரை நடந்தது)

2. தேடிக்கற்றல் ( இது அவரது 20 வயது தொடக்கம் 25 வரை நடந்தது)

3. முறையாகக் கற்றல் ( இது அவரது 25 வயது தொடக்கம் 30 வரை நடந்தது)

4. தனது வாழ்வனுபவங்களைபடமாக்குதல் ( இது அவரது 30 வயது தொடக்கம் 60 வயது வரை நடந்தது

5. வாழ்வனுபவம், அறிவு மூலம் ஓர் ஞானியாக பரிணமித்தல்( இது அவரது 70 வயதுக்குபிறகு நடந்தது)

ஒரு கலையில் ஈடுபடும் ஓர் கலைஞனின் அதி உயர் நிலை அதுவாகவே மாறி

ஒர் பற்றற்ற நிலை எய்துதல் என்பர் அறிஞர்

பாலு மகேந்திரா அண்ணரை நினைக்கையில் இவ்வாக்கியமே ஞாபகம் வருகிறது

வாழும் வரை கற்க வேண்டும் என்ற படிப்பினை அவரிடமிருந்து இத்தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்

படிப்பு, கற்றல் என்பன இந்த இளம் தலை முறை வைத்திருக்கும் வெற்றுப் பானையை மிகவும் நிறைக்கும்

அதாவது அவர்கள் சட்டி நிறையும்

சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி

இளம் தலை முறைஅதி உயர் தொழிநுட்பம் எனும் தங்க அகப்பை வைத்திருந்தாலும்

தங்க சட்டி வைத்திருந்தாலும்

சட்டியில் எதுவும் இல்லாது விடின் எதனைப் பரிமாறுவார்கள்?

நிறைந்த பல் துறை வாசிப்பாலும்

சிந்தனையாலும்

வாழ்பனுவங்களாலும்

விமர்சன சிந்தனையாலும்

இளம் தலைமுறை ஆர்வலர்களின் சட்டி நிறைவதாக

-நாடத்துறைப் பேராசிரியர் சி. மௌனகுரு

நன்றி- முகநூல்

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 27 | பத்மநாபன் மகாலிங்கம்

சைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு...

பொருட்டாகுமா போராட்டங்கள் | ஆர்.ராம்

கட்டுரையாளர் - ஆர்.ராம்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பிலான தனது மீளாய்வு அறிக்கையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பித்து...

ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? | நிலாந்தன்

கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து...

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்!

2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா:உலகளவில் செவி திறன்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்

முன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate,...

ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு | நிலாந்தன்

கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப்...

தொடர்புச் செய்திகள்

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில் (08.03.2021) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை வழங்கிய சிறிய கட்சிகள்

அ.தி.மு.க கூட்டணிக்கு பத்துக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் ஆதரவை வழங்கி அக்கட்சியின் இரட்டை தலைமையிடம் கடிதங்கள் வழங்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி...

மேலும் பதிவுகள்

சென்னைக்கு சென்றார் தோனி

14 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மஹேந்திர சிங் தோனி சென்னை வருகை தந்ததாக...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு | முழு அறிக்கை!!

2021ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பாக இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித...

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,...

‍டோக்கியோ ஒலிம்பிக் | வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

பிற்போடப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு ஜப்பான் மறுத்துள்ளது.  அதன்படி ஜப்பானுக்கு வெளியில் இருந்து வரும்...

வெடி குண்டு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடப்பட்ட தாஜ்மஹால்

வெடி குண்டு அச்சுறுத்தலின் பின்னர் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகலாய காலத்தின் நினைவுச்சின்னமான தாஜ்மஹால் வியாழக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

எஸ் ஜே சூர்யா மீண்டும் கலக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ | திரைவிமர்சனம்

நடிகர்எஸ் ஜே சூர்யாநடிகைநந்திதாஇயக்குனர்செல்வராகவன்இசையுவன் சங்கர் ராஜாஓளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான்...

பிந்திய செய்திகள்

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

நியூஸிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்

பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கம் சுனாமி அச்சங்களையும் வெகுஜன வெளியேற்றங்களையும் தூண்டிய சில நாட்களின் பின்னர் நியூசிலாந்து அதன் கிழக்கு கடற்கரையில் 6.6 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜண்ட்ஸ்

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள்,...

துயர் பகிர்வு