Monday, August 8, 2022

இதையும் படிங்க

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை | சிவஞானம் கருத்து

தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடமாகாண சபையின் அவைத் தலைவருமான...

சர்வகட்சி குறித்து மகிந்த கருத்து!

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாடசாலை நடத்தப்படும் நாட்களில் மாற்றம்

அடுத்த வாரம்(08 - 12) பாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.   இதன்படி, நாளை  முதல்(08) ஆரம்பமாகும்  புதிய வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும்...

சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப்பெற அரசியல் ஸ்திரத்தன்மையை நிரூபிக்க வேண்டும் | மைத்திரி

சர்வதேச நிறுவனங்கள் , அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு வெகுவிரைவில் சர்வகட்சி...

கப்பல் விவகாரம் | இலங்கையின் வேண்டுகோள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஆராய்ந்த பின்னர் பதில் |  சீன தூதரகம்

சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன...

ஆசிரியர்

ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல் | தீபச்செல்வன்

rajapu josep 77894

இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே. இலங்கையில் நடந்த இன அழிப்பு யுத்தம் குறித்து தமிழ் தலைமைகள் கூட மௌனித்திருந்த நிலையில் அதை தன்னுடைய தெளிவான பார்வை ஊடாக முறையான முன்வைத்தார் அல்லது கேள்வி எழுப்பினார்.

ஈழத்தில் பல மதபோதகர்களுக்கு என்ன நடந்தது என்பதை கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். ஜிம்பிறவுண் அடிகளாரை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. அவர் 2006 யுத்தம் மூண்ட சமயத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர். மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த கருணாரட்னம் அடிகளாரை அன்றைய அரசு கிளைமோர் தாக்குதல் ஊடாக கொன்றது.

தமிழர் தாயகத்தில் ஆங்கிலக் கல்வி கற்பித்து வந்த அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளுடன் பல நூறு போராளிகளுடன் சரணடைந்து காணாமல் போனார். மதகுருவுக்கான வெள்ளை உடையுடன் சரணைடைந்த அருட்தந்தை பிரான்சிஸை இலங்கைப் படைகள் என்ன செய்தார்கள்? போராளிகளுடன் சாட்சியாக சரணடைந்தவரை இராணுவப்படைகள் என்ன செய்தன?

இவ்வாறான ஒரு சூழலில்தான் மன்னார் ஆயரின் குரல் மிகுந்த கவனத்தை பெறுகிறது. இலங்கையிள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றியின் மமதையில் இருந்தபோது இன அழிப்புப் போரில் கொல்லப்பட்டவர்களின் கதை முடிந்துவிட்டது என்று இருந்தபோது ராஜபக்சவை நோக்கி ஆயர் அவர்கள் காணாமல் போன ஒன்றரை லட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அது ஈழச் சனத்தின் நீதி குறித்த உள்ளக்கிடக்கியின் மிக முக்கியமானதொரு கேள்வியாகும்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜகபக்ச சர்வதேச அழுத்தங்களை குறைக்கும் முகமாகவும் இனப்படுகொலையை மறைக்கும் விதமாகவும் தனக்குத்தானே முன்னெடுக்கும் உள்ளக விசாரணையாக காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தபோது மன்னார் ஆயர்கள் அவர்கள் யுத்தத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியம் அளித்தார்.

பின்னர் அந்த ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை என்பதை ஆணைக்குழுவின் முன்னாள் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். உண்மையும் நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருக்கப்போவதில்லை என்றும் உண்மையில் மக்களு்ககு விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அதற்காகவே சாட்சியம் அளிப்பதாகவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாத்தில் கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆயர் பல முக்கியமான விடயங்களைக் குறித்து பதிவு செய்திருந்தார்.

”கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல. பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம். சிங்கள மக்களிம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தனித்துவமான சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கு இடமளிப்பதன் மூலமே இந்த நாட்டை அமைதிப்படுத்த இயலும். இலங்கை சுதந்திரம் அடைந்தது என்ற விடயத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்பது ஓர் மாயையாக திணிக்கப்பட்டது தமிழ் மக்கள் இன்னமும் சுதந்திரத்தை அடையாத நிலையில் வாழ்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராகவும் அபிலாசைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மொழி மற்றும் நில அபகரிப்பு என்பது உலக சரித்திரத்தில் ஓர் இனம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அவ்வாறு நடை பெறுகின்றது. இலங்கையில் நான்கு தடவைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக் கலவர நடவடிக்கைகள் இன அழிப்புச் செயற்பாடுகள். அந்த இன அழிப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது. மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர் தொடர்ந்தும் இந்த நாட்டில் தமிழ் மக்களை வாழ விடாது வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலமையை உருவாக்கியதுடன் அரசாங்கமே மக்களை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். புதிய இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கானது என தான் நம்பவில்லை. அவை உண்மையை மறைப்பதற்கான ஏற்பாடு. இதற்காகவே இலங்கை அரசாங்கம் ஓடி ஓடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. உண்மையின் அடிப்படையில் உண்மையின் நீதியின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். மக்களின் உரிமையை பாதுகாப்பும் பொறுப்போடு உருவாக்கப்பட்ட ஐ.நா தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியான வரலாற்றின் இறுதியிலேயே எம்மீது கவனம் செலுத்தியது. அதனை ஐ.நா உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது அல்ல. உலக மக்களின் மனித உரிமைகளுக்கு எதிரானது. உலக மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஓர் நடவடிக்கையே உலகப் பொது நடவடிக்கை.”

தென்னிலங்கை ஊடகங்கள், இவரை விடுதலைப் புலி என்றும் பிரபாகரன் என்றும் சித்திரித்த போதெல்லாம் அதனை மிக நிதானமான எதிர்கொண்டார் ஆயர். ஏன் அவ்வாறு தன்னை சொல்லப்படுகின்றது என்பதை கேள்வியாக திருப்பி அளித்து ஈழத் தமிழர் நியாயத்தை எடுத்துரைத்தார். ஈழ மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தமையால் பிரபாகரனைப் போல புலிச் சீருடை அணிந்து படங்களை வெளியிட்டு மகிழந்தது தென்னிலங்கை ஊடகங்கள்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் குரலால் பெரும் பங்களித்தவர்களில் மன்னார் ஆயர் முக்கியமானவர். ஈழத் தமிழ் மக்களினால் சமயம் கடந்து நேசிக்கப்பட்ட உன்னத மனிதர். அதனால் இன்று அவரது இழப்பு என்பது ஈழத் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. ஆனாலும் அன்று இனப்படுகொலையின் நீதிக்காக அவர் எழுப்பிய குரல் என்றும் ஒலிக்கக் கூடியது.

தீபச்செல்வன்

இதையும் படிங்க

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான...

பொய்க்கால் குதிரை | திரைவிமர்சனம்

கதைக்களம் ஒற்றை காலுடன் தன் குழந்தையைக் காப்பாற்ற போராடும் சாதாரண மனிதனின் கதை விமர்சனம்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை |  நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்

நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா...

தொடர்புச் செய்திகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க...

பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்

கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்

முள்ளிவாய்க்கால் பரணி! | தீபச்செல்வன்

01கால்கள் எதுவுமற்ற என் மகள்தன் கால்களைக் குறித்துஒருநாள் கேட்கையில்நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர்யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை |  நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்

நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா...

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

மேலும் பதிவுகள்

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை | சிவஞானம் கருத்து

தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடமாகாண சபையின் அவைத் தலைவருமான...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவைக் கைதுசெய்யுங்கள் | கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர், சமாதானம்...

பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் உள்ளடக்கம் | புதிய நடைமுறை

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகளை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதிய கடிதம்

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள சில நாடுகளில் சமூக பதற்ற நிலைமைகளால் பல ஆண்டுகள் ஸ்திரமற்ற நிலைமையும் , அராஜகதன்மையும் நிலவி வருகின்றன.

அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வரும் கமல்ஹாசன்

கமல்தமிழ்ல் சினிமாவின் டாப் நடிகரான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

பிந்திய செய்திகள்

கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது.

பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை. உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன்...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

துயர் பகிர்வு