செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு 19 | சங்ககாலத்தில் விலங்குகள் பலியிடுதல் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | சங்ககாலத்தில் விலங்குகள் பலியிடுதல் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

4 minutes read

 

இறைவனுக்குப் என்பது சங்க காலம் தொடக்கம் இருந்து வரும் ஒரு சடங்கு முறையாகும். ஓர் உயிரைக் கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிர் காப்பாற்றப்படுகிறது. பாதுகாக்கப்படுகின்றது. அல்லது வளமா பெறுகின்றது என்ற நம்பிக்கை அன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது.

அகநானூறு 156

“கள்ளும் கண்ணியும் கையுறைகா
நிலைக்கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய்”
என்று பாடுகின்றார். காதலில் இருக்கும் தலைவியை கண்டு அவள் தாய் நீர்த்துணைக்கு அருகில் நிலை பெற்றிருக்கும் கடவுளுக்கு மகளின் இந்த நிலைக்குத் தெய்வ குற்றம் எனக் கருதி கள்ளும் காந்தள் பூக்களால் ஆன கண்ணியும் நிலையான கொம்புகளையும் தொங்கும் காதுகளையும் உடைய வெள்ளாட்டுக் கிடாயும் உட்பட எல்லாம் கையுறையாகப் படைத்துப் பலியிட்டுப் போற்றினாள் என்று ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார்.

இதற்கு முந்தைய பதிவில் “வேலன் விளையாட்டு அயர்தல்” என்று பார்த்திருந்தோம். குறிஞ்சி நிலத்தில் மகளானவள் காதல் பித்து பிடித்திருந்தால் வேலன் என்பவன் அதாவது முருகனைப் பூசிக்கும் பூசாரி வேல் கொண்டு “வேலன் வெறியாட்டு” நிகழ்த்தி அந்தப் பெண்ணின் மனநிலையை மாற்றுவானாம். அதே போன்று மருத நிலத்திலும் அந்த நில மக்கள் நீர் துறைக்கண் உள்ள கடவுளுக்குப் பலியிட்டுப் போற்றி வணங்குவார்கள்.

வேலன் விளையாட்டு

வேலன் பூக்களும் புகையுமிட்டு முருகனை வாழ்த்தி ஆடிப்பாடி வழிபாடு நிகழ்த்துவான். திருமுருகாற்றுப்படையில் “வேலன் வெறியாட்டு” விரித்துக் காணப்படுகின்றது.
” சிறு தினை மலரோடு விரைஇயை மறியறுத்து
வாராணக் கொடியொடு வழிபட நிறீஇ”
என்று வரும் பாடலில் சிறு தினையோடு ஆடு அறுத்துப் படைத்துக் கோழிக் கொடியுடன் மலர்கள் பரப்பியும் முருகனுக்கு விழா எடுக்கப்பட்டது என்கிறது. ஆட்டுக்கிடாய் அறுத்து தினையுடன் அல்லது சோற்றுடன் கலந்து படைக்கப்படும். இது “முருகையர்தல் அல்லது முருகாற்றுப் படுத்துதல்” என்று அழைக்கப்படும். எளியோரின் தெய்வமாய் நின்று முருகன் தினையையும் ஆட்டையும் ஏற்றுத் தமிழரோடு நின்ற காலம் போய் இன்று வேறு நிலை வந்து விடக் காரணம் ஆரியர் வருகையே என்பது இங்கு புலப்படுகின்றது.

சிறுதெய்வ வழிபாடு

இன்றும் சிறுதெய்வ, கிராமப்புற வழிபாட்டில் பலியிடலும் அசைவப் படையலும் முக்கிய இடம் பெறுகின்றன.

தமிழ் நாட்டில் இன்னும் சில மலை வாழ் ஊர்களில் பல்வகைக் காய்கறிகளோடு முருகனுக்கு அசைவ உணவுகளும் படையிலாகப் படைக்கப்படுகின்றன. கிராமப்புற தெய்வங்களுக்கு பலியிடுதல் இடம் பெறுகின்றது.

நமது ஈழத்திலும் சில இடங்களில் எமது பெற்றோர்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு கோழி போன்றவற்றை பலியிட்டு இறைவனை வணங்கினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் காலப்போக்கில் எல்லாச் சிறு தெய்வங்களும் அசைவத்தை விட்டு சைவத்துக்கு மாறி வந்த நிலை காணப்படுகிறது.

இன்று அருவருப்பாக நாம் பார்க்கும் இந்தப் பலியிடும் நிகழ்வும் அல்லது அசைவப் படையலும் எமது வாழ்வு முறையாக இருந்திருக்கின்றது.

நாம் எதைச் சாப்பிட்டோமோ அதையே இறைவனுக்குப் படைத்து வழிபடும் இனமாக, இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்திருக்கின்றோம் என்பதை இந்தப் பதிவு காட்டி நிற்கின்றது.

இந்த வரலாற்று உண்மையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More