Tuesday, September 28, 2021

இதையும் படிங்க

நீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...

சுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு!

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு!

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....

தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்!

தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...

ஆசிரியர்

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே! | தீபச்செல்வன்

ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல் ஆக்கப்படுகின்றன. மனித உயிர்களோ இவை யாவற்றையையும் விட அற்பமாக கருதப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றன. இன்றைக்கு இனவழிப்பின் சாட்சிகளாக இருப்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களே. இல்லாதவர்களே எங்கள் சாட்சிகள். இல்லாதவர்கள் எங்கள் இனத்திற்காக போராடுவதைப் போல இருக்கும் நாம் போராடுவதில்லை என்பது எத்துணை துயரமானது? இல்லாதவர்கள் இருப்பதைப்போல போராட இருக்கும் நாமோ இல்லாதவர்களைப் போல இருக்கிறோம். 

ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம். உண்மையில் இதுபோன்ற ஒரு தினத்தை கொண்டாட இந்த உலகம் வெட்கப்பட வேண்டும். மனித உயிர்களுக்கும் மனித உரிமைக்கும் எதிரான அநீதிகளின் அதிகரிப்புதான் இந்த நாளை கொண்டாடுகின்ற சூழலை உருவாக்குகின்றது. இந்த நாளை கொண்டாடுகின்ற இனமான நாம் ஆகிவிட்டதை எண்ணி மிகவும் துயருர வேண்டி இருக்கின்றது. ஈழத் தெருக்கள் என்பது உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைகின்ற அன்னையர் நிலம்தான்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையொன்றின் அன்னையொருத்தியின் முகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் கண்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. காலத்துயரம் நிரம்பிய அக் கோலத்தை பார்ப்பது என்பது மனசாட்சி உள்ள மனிதர்களை உலுப்புகின்ற செயல். போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிள்ளைகளை அரசிடம் தொலைத்த அன்னையர்களும் தந்தையர்களும் அழுது புலம்பி போராட்டத்தை நடாத்தியே வருகின்றனர். உலகிலேயே இவ் அவலம் அதிகரித்திருப்பது இலங்கையில்தான்.

உலக அளவில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பாக சர்வதேச புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இலங்கை அரசு நடாத்திய இன அழிப்பு போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே உலகில் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு இலங்கை என்ற பெருமையும் உண்டு.

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன அழிப்பின் ஒரு உபாயமாகத்தான் பயன்படுத்தப்படுகின்றது. உலகில் ஜனநாயக ரீதியில் உரிமைகளை கோருகிறவர்களை காணாமல் ஆக்குவது என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது என்ற கருத்து உண்டு. உண்மையில் அதை கனகச்சிதாக இலங்கைக்குப் பொருந்துகின்றது. உரிமை கோரி போராடிய ஈழத் தமிழ் மக்களை காணாமல் ஆக்குவதை ஒரு வழிமுறையாகவும் ஆயுதமாகவும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அரசாங்கம் காணாமல் போதலை ஒரு கருவியாக கையாள்கின்றது. குறிப்பாக இராணுவத்தின் வசம் போரில் வீழ்ந்த தமிழர் பகுதிகளில் காணாமல் ஆக்கப்படுதலின் வாயிலாக இளைஞர்கள், யுவதிகள் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்படும் அவர்கள் மிக மோசமான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். சில கொலைகள் அப்படி அம்பலமாகியுமுள்ளன.

சிங்கள இராணுவத்தின் வசமிருந்த யாழ்ப்பாணம் போன்ற அரச காட்டுப்பாட்டு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். ஏன் வீடுகளுக்குள் நுழைந்தும் இரண்டு மூன்று சகோதரர்களாக கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது போரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் சரணடைந்தவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்களும்கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்குப் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம், இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றது. அவர்கள் உயிருடன் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் சொல்ல வேண்டியது அவ் அரசின் வகை கூறலும் பொறுப்புமாகும். இதிலிருந்து ஒருபோதும் இலங்கை அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் உணர்வுபூர்வமான சிக்கலான விடயமாகும்.

காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையின் கொடூரமான இன ஒடுக்குமுறையை இனவழிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. அது மாத்திரமல்ல, இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை தனது சொந்தப் பிரஜைகளாக கருதவில்லை. இன்னொரு நாட்டின் அடிமைகளாக கருதியதினாலேயே இவ்வாறு காணாமல் ஆக்கியிருக்கிறது. தமிழ் மக்கள் தமது தாயகத்தை கோரினால் காணாமல் ஆக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான அச்சுறுத்தலையே இதன்மூலம் இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில், சர்வதேச தலையீடுதான் நீதியைப் பெற்றுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உண்மையில் இந்த விடயத்தை அரசியல் முதலீடாக கருதாமல் உணர்வுபூர்வமான விடயமாக கருதி, விளைவுகளை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ் தலைமைகள் ஈடுபட வேண்டும். இதனை ஆதாரபூர்வமான விடயங்களுடன் சர்வதேச ரீதியாக வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே நீதிக்கான வழிமுறையாகும். 

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகுந்த ஆளுமைகள். எமது இனத்தின் வளத்திற்கும் செழிப்புக்கும் அடிப்படையானவர்கள். அத்தகைய மனிதர்களை இழந்த இந்த மண் எத்துணை இழப்பை சந்தித்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்? ஈழப் போரில் இலங்கை அரசு இழைத்த அநீதிகளை உலுப்பும் ஒரு ஆயுதமாகவும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மாறியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு பதில் அளித்தே ஆக வேண்டும். இலங்கை அரசு அளிக்கும் பதில் என்பது பல்வேறு உண்மைகளை அம்பலம் செய்வதுடன் இத்தீவில் ஈழத் தமிழரின் விடுதலைக்கும் அமைதிக்குமான திறவுகோலாகவும் இருக்கும். அதுவே காயம்பட்ட இனத்திற்கான மருந்தும் நீதியுமாகும். 

கவிஞர் தீபச்செல்வன்

இதையும் படிங்க

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு!

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...

தொடர்புச் செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...

வலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்

"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...

குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...

மேலும் பதிவுகள்

யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...

ஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...

ரஷியாவில் கடும் பனிப்புயல்- மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

மலைச்சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள், இறங்கும்போது கடுமையான பனிப்புயல் வீசியதால் நிலைகுலைந்தனர். ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ்...

சுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

பேச்சுக்களை நடத்த நாங்கள் தயார் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம்...

சமந்தாவுடன் விவாகரத்தா? முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா

நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின்...

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

துயர் பகிர்வு