Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஜேர்மனிய பேரரசு நிகழ்த்திய நமீபியா இனப் படுகொலை | பின்னணியும் பிந்திய நீதியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஜேர்மனிய பேரரசு நிகழ்த்திய நமீபியா இனப் படுகொலை | பின்னணியும் பிந்திய நீதியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

9 minutes read

நமீபியா – காலனியாதிக்க இனப் படுகொலை:

ஜேர்மனியின் மன்னிப்பும் நஷ்ட ஈடு வழங்கலும்..

மேற்குலக கனிமவள சுரண்டலும் பொருளாதார வீழ்ச்சியும்…

——————————————————

கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா

நூறுஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று ஜேர்மனிய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.  

இனப்படுகொலை – ஜேர்மனிஒப்புதல்:

நமீபியப் படுகொலைகளுக்காக ஜேர்மனிய அரசு கடந்த 2002 ஆம் ஆண்டில் மன்னிப்புக் கோரியும் இருந்தது. ஆனால் அதனை இனப்படுகொலை (genocidal) என்று ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறை ஆகும். 

நமீபியாவில் இழைக்கப்பட்டவைகள் இன்றைய உலகின் கண்ணோட்டத்தில் இனப்படுகொலைகளே என்பதை ஒப்புக்கொள்வதாக ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் (Heiko Maas) 2018இல் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக நமீபியா நாடு உள்ளது. இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.     

இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்கஅபிவிருத்தி ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப்பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.  

ஜெர்மானிய குடியேற்ற ஆக்கிரமிப்பு:

ஐரோப்பிய நாடுகளில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட  ஜெர்மனியஅரசு, பிரிட்டன் – பிரெஞ்சு படைகளுக்கிடையிலான போரை பயன்படுத்தி ஆப்ரிக்க பிரதேசங்களிலுள்ள தெற்கு பகுதிகளை தன்வசப்படுத்தியது. இதன் பின்னர இனப்படுகொலை, போர், காலனித்துவம் மற்றும் ஜெர்மானியர்கள் குடியேற்றத்திற்கு வழிவகுத்தது.  

இதுபல ஆண்டுகளாக ஏன் இன்றளவும் பூர்வீகமக்களை பெரிதும் பாதித்து வருகிறது. 117 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அரசு நமீபியாவில் நடந்ததுஇனப்படுகொலை என்று ஒப்புக்கொண்டு அந்நாட்டின் வளர்ச்சிக்காக 1.3பில்லியன் டாலர் நிதியுதவி தருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை மே 27, 2021 அன்று வெளியிட்டதும் அறிந்ததே.

அடுத்த 30ஆண்டுகளில் இந்த தொகை பகுதியாகபிரித்து விடுதலை அடைந்த நமீபியா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கொடுத்து உதவுவதாக ஜேர்மனிய அரசு கூறியுள்ளது

மனித நேயமற்ற இனப்படுகொலை :

இனப்படுகொலை என்பது “மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் ஊடாக நாட்டின் பொருளாதார சமூக மேம்பாடு என்ற பெயரால் ஒருகுறிப்பிட்ட தேசிய இன மொழி பேசும்மக்களை, குறிப்பிட்ட சமயத்தை பின்பற்றுபவர்களை ஒட்டுமொத்தமாகவோ அல்லது பகுதியாக வன்முறையின் மூலம் அழித்தொழிக்கும் மனிதநேயமற்ற துன்பகரமான செயலே ஆகும்.”  

உலக நாடுகளிடையே இனப்படுகொலை என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை ஆப்பிரிக்காவில் ஹிட்லரின் நாசி படையால் “ஜெர்மன்தென்மேற்கு ஆப்பிரிக்கா” (தற்போதைய நமீபியா) பகுதியில் அரங்கேறியுள்ளது.

கைதிகளாக கெரேரோ மக்கள் :

நமீபியாவில்மொத்தம் 12 பூர்வக்குடி இனக்குழுக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களில் ஒவோம்போ இனமக்கள், டமாரா இனமக்கள், நாமா இனமக்கள் முக்கியமானவர்கள். அதில் மக்கள் தொகை அதிகமுள்ளது கெரேரோக்களும் நாமாக்களுமே.

அவ்ர்கள் 1897க்கு முன் கால்நடை வர்த்தகத்தாலும், விவசாயத்தாலும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும்  வலுப்பெற்றிருந்ததனர். 

 தங்கள் பொருளாதார பலத்தை சிதைக்கும் வண்ணம் ஏற்பட்ட ரிண்டர்பஸ்ட் நோய் (Rinderpest disease) காரணமாக 90% கால்நடைகள் இறந்து போயின, இதனால் உடல் மற்றும் மனரீதியாகசோர்வுற்று நலிவடைந்தனர். இதுவே காலனி ஆதிக்கத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.  

ஜேர்மனியின் நிதி இழப்பீடு :

நமீபியஅரசுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் அங்கு இனப்படுகொலையுண்ட ஆதிக்குடி மக்களது பரம்பரையினரது முன்னேற்றத்திற்காகவும் நாட்டை மீளக் கட்டியெ ழுப்புவதற்காகவும் ஒரு பில்லியன் ஈரோக்களை (€1.1 billion) வழங்குவதாகவும்ஜேர்மனி அறிவித்திருக்கிறது.

நமீபியாவின்ஆதிக் குடிகளான ஹெரேரோ மற்றும் நாமா(Herero- Nama)இனங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஜேர்மனிய காலனிப்படைகள் புரிந்தகொடுமைகளை “அளவிடமுடியாத் துன்பம்”( immeasurable suffering) என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இப் படுகொலையை முறைப்படி ஏற்றுக்கொள்கின்ற பிரகடனத்தை ஜேர்மனிய நாட்டின் குடியரசுத் தலைவர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்(Frank-Walter Steinmeier) நமீபிய நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வெளிப்படுத்தினார்.

நமீபியாவில் நடந்த கொடுமை:

 1800 களின்இறுதியிலும் 1900 களின் தொடக்கத்திலும்(1884 -1915) நமீபியா உட்பட பலநாடுகள் ஜேர்மனியின் ஒரு பகுதியாக அதன்பேரரசுகளது கட்டுப் பாட்டில் இருந்தன. இன்றைய நமீபியா அச்சமயம் “ஜேர்மன் தெற்கு மேற்கு ஆபிரிக்கா”(German South West Africa) என்றேஅழைக்கப்பட்டது.  

 நமீபியாவின் பூர்வீக குடிகளான ஹெரேரோ மற்றும் நாமா இனங்களைச்சேர்ந்தோர் அன்றைய ஜேர்மனியக்குடியேற்ற அதிகார ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். முதலில் ஹெரேரோ இனமக்களும் தொடர்ந்து நாமா இனத்தவரும் நடத்திய கிளர்ச்சிகளை ஜேர்மனியப் பேரரசுப் படைகள் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கின.  

ஆண்கள்அனைவரும் தூக்கில் இடப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் சிறிதளவு உணவுடன் பாலைவனத்திற்குத் துரத்தப் பட்டு அங்கு தண்ணீர் இன்றிப் பட்டினி மற்றும் வாந்திபேதியால் மடியவிடப் பட்டனர்.  

தங்கள் நிலங்களையும் கால்நடைகளும் இழந்து இன்று கலஹாரி பாலைவனம் என்று (Kalahari Desert) அழைக்கப்படுகின்ற பகுதிக்குள் விரட்டப்பட்டவர்கள் நீர் இன்றி உயிரிழப்பதை உறுதிப்படுத்துவதற்காக பாலைவனத்தில் காணப்பட்ட ஒரு சில தண்ணீர்கிணறுகளை ஜேர்மனியப் படைகள் தகர்த்து மூடிவிட்டன.  

ஆயிரக்கணக்கான ஹெரேரோ இன ஆண்களும் பெண்களும் நமீபியா கரையோரமாக அமைந்துள்ள சுறாத் தீவில் (Shark Island) வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஜேர்மனியப் பேரரசினால் நிறுவப்பட்ட வதை முகாம்கள் பலஅமைந்திருந்த காரணத்தால் சுறாதீவு , மரணத்தீவு (“Death Island”) எனவும் அழைக்கப்பட்டுவந்தது.  

பூர்வீகக்குடிகள் அழித்தொழிப்பு:

பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் உத்தரவுகளை அப்போதைய ஜேர்மனிய குடியேற்றப்படைகளது தளபதி ஜெனரல் லோதர் வொன் ட்ரோத்தா(General Lothar von Trotha) என்பவரே விடுத்தார்.  

 அவரது கொடூரசெயல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அழித்தொழிக்கப்பட்டனர். வரலாற்று நிபுணர்களது கணிப்பின்படி1904-1908 காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த ஹெரேரோ (Herero) இனத்தவர்களில் சுமார் 65 ஆயிரம் முதல் ஒரு லட்சம்பேர்வரை கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகிறது.  

நாமா (Nama) மக்கள் கூட்டத்தில் சுமார் இருபதாயிரம் பேர் வரை படுகொலைசெய்யப்பட்டனர். நமீபியாப் படுகொலைகளை இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.  

சாமுவேல்மஹாரெரோ

ஜேர்மன காலனியாதிக்கத்தை எதிர்த்து ஹெரேரோ இன மக்கள் முதல்முறையாக ஒகாண்டஜூ (Okahandju) என்னும் சிறு நகரத்தில் ஜெர்மனியர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார்கள். அது வன்முறையாய்  வெடித்தது.

ஜெர்மனியை எதிர்த்த குடிமக்களை அழித்தொழிக்க அப்போதைய ஜெர்மனிய குடியேற்றப் படைகளின் தளபதி ஜெனரல் லோதர் வான் ட்ராதா(General Lothar von Trotha) கட்டளையின் பெயரால் ஆயிரக்கணக்கான மக்கள் மனிதநேயமற்ற கொடுஞ்செயலுக்குட்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர். 

இக்கிளர்ச்சியில் முன்னணியாக இருந்து செயல்பட்டவர் சாமுவேல் மஹரேரோ (Samuel Maharero) மக்களுடனே கொல்லப்பட்டார்.

பழங்குடிகளின் மீதான இனப்படுகொலை:  

ஜெர்மனிஅரசை எதிர்த்த பழங்குடியினர் மக்கட்தொகையில் பெருமளவு கொல்லப்பட்டனர். 1907-ல் ஜேகப் மாரெங்கோ மரணத்திற்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது. முடிவில் 100,000(80%) ஹெரேரோ இன மக்களும் 10,000(50%) நாமா மக்களும்கொல்லப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட பழுங்குடியினர் பலர் சிறையிலே இறந்து கிடந்தனர்.  

1990 இல்சுதந்திர நாடாக பிரகடனம் :

ஜெர்மனிய ஆதிக்கத்திற்குப் பின்னர் நமீபியா சுமார் 75 ஆண்டு காலம் தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தென்ஆப்பிரிக்காவின் மோசமான இனஒதுக்கலால் மீண்டும் அங்கு விடுதலை போராட்டங்கள் 1950ம் ஆண்டில் வெடித்தன.  

அரசியல் கோரிக்கையை தென்னாப்பிரிக்க அரசு ஆயுத வழியில்நசுக்க முற்பட்ட போது நமீபிய மக்கள்ஆயுதப்போரட்டத்தையும் அதன் ஒரு பகுதியாக கொரில்லா போரையும் கையிலெடுத்தனர்.

பல கட்ட போராட்டங்கள், சர்வதேச நாடுகளின் பல்வேறு சதிகள் இவை அனைத்தையும் நமீபியாமக்களின் ஒன்றுபட்ட போராட்ட குணத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போக இறுதியில் மார்ச் 21,1990ல் நமீபியா சுதந்திர நாடாகியது.  

பிறகுஹெரேரோ மற்றும் நாமாக்களும் ஒருங்கிணைந்த அரசியல் இயக்கமாகவும் கட்சியாகவும் இணைந்து நமீபியாவில் தங்களுக்கு நடந்த அநீதி இனப்படுகொலையே என ஐக்கிய நாடுகள்முன் ஐநாவிலே அரசியல் கோரிக்கை வைத்தனர். அது மட்டுமல்ல பலஅடையாளப் போராட்டங்களையும் முன்னெடுத்தார்கள். 

நமீபியா 1990 இல்சுதந்திர நாடாகியது:

2004ல், நமீபியா நாட்டிற்கு வருகை தந்து ஜெர்மனி அமைச்சர் ஹெரேரோ மக்களிடம் மன்னிப்பு கேட்டதை அறிந்த ஜெர்மனி அரசு அந்த அமைச்சரை கண்டித்ததும் உலகறிந்ததே.

2006ல் ஜெர்மனி நமீபியாவில் நடந்தது இனப்படுகொலை என்று ஜெர்மனி தங்கள் அருங்காட்சித்தில் இருக்கும் ஹெரேரொ இன மக்களின் மண்டையோட்டை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  

2015ல்இரண்டு நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில், “கடந்த கால காயங்களை குணமாக்குங்கள்” என்றஅடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டு, பிறகு 2018ல் இன அறிவியல் பரிசோதனைக்காக  (pseudo science racial experiment) வைத்திருந்த ஒரு டஜன் மண்டையோடுகள் நமீபிய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டது.  

நூற்றாண்டு இனப்படுகொலை :

ஒரு நூற்றாண்டாக இனப்படுகொலையை ஒப்புக் கொள்ளாத ஜெர்மனிய அரசு, நமீபிய மக்களின் பல கட்ட சனநாயகபோராட்டங்களுக்கு பிறகு கடந்த மே28, 2021அன்று நமீபியாவில் நடந்தது இனப்படுகொலை என்றும், தங்கள் முன்னோர்கள் செய்த வரலாற்றுப் பிழையை ஈடுகட்டும் வண்ணம் நமீபிய நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு 1.3பில்லியன்டாலர் இழப்பீடு தருவதாக ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (Heiko Maas) பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். இந்த இழப்பீட்டை நமீபிய அரசும் ஒப்புக்கொண்டது.  

சுதந்திரத்திற்குபிறகு நமீபியா நாட்டில் வாழ்ந்து வரும் 7% மேற்குலகை சார்ந்தவர்கள் 60% விவசாய நிலத்தை தன் வசம் வைத்துள்ளார்கள்.

எனவே இந்த நடைமுறை அங்குவாழும் ஜெர்மனியின் மைத்துனர்களுக்கே பயண்தருவதாகக் கருதப்படுகிறது.   

இதற்குமுன்னர் ஜெர்மனி அரசு நிதியுதவி தரமுன்வந்தபோது மறுத்த நமீபியா அரசு இப்பொழுது பாதிக்கப்பட்டஇன மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுள்ளதால் நமீபிய மக்கள் கன்டனத்திற்கும் எதிர்ப்பிற்கும் ஆளாகியுள்ளது.  

சமூகவளர்ச்சி என்ற பெயரால் வன்முறைமூலம் குறிப்பிட்ட இனத்தையே அழித்தொழித்துவிட்டு, சமூக சீரழிவை செய்ததரப்பு பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட தரப்பிடம் அரசியல் மன்னிப்பு கோருவதும், மீள கட்டமைக்க நிதிசேவைகள் செய்வதும்  மட்டுமேபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தந்துவிடாது தான்.  

ஆனால்இந்த நவீன 21ம் நூற்றாண்டில் செய்தகுற்றத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பிடம் மன்னிப்பு கோருவது குறைந்தபட்ச அரசியல் ஜனநாயகமாக கருத வேண்டியுள்ளது.

தொடரும் அநீதியும் நிலஆக்கிரமிப்பும் :

நமீபியாவில் தொடரும் அநீதியை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்க முடியாத நிலை உள்ளது. சுதந்திரம், ஜனநாயகம் பேசும் மேற்குலக நாடுகளின் முகமூடி இங்கே கிழிகின்றது.

பனிப்போரின் பின்னர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய ஐந்துநாடுகள் மத்தியஸ்தம் வகித்தமையினால் தான், நமீபியா சுதந்திரம் அடைந்தது.  

அப்போதுஅவர்கள் ஒரு நிபந்தனை விதித்தார்கள். தனியார் சொத்துரிமை பாதுகாக்கப் பட வேண்டும் என்றவாக்குறுதியை, புதிய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டன. இதனை நிச்சயப்படுத்தும், நமீபிய அரசமைப்புசட்டத்தின் மூன்றாவது பிரிவில் எழுதப்பட்ட வாசகங்களை, எக் காரணம் கொண்டும்மாற்றக் கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டன.  

ஆபிரிக்க கறுப்பினமக்கள், தமது இனத்தவரின் ஆட்சிநடப்பதாக பெருமைப்பட ஏதுமில்லை. கறுப்பின அரசாங்கத்தை திரையாகப் பயன்படுத்திக் கொண்டு, இன்னமும் மேற்குலக காலனிய சுரண்டல் தொடர்கின்றது.  

கனிம வளங்கள் நிறைந்த நமீபியா :

யுரேனியமும், வேறு கனிம வளங்களும் நிறைந்தசெல்வம் கொழிக்கும் நமீபியாவில் கனிம வளங்களைஅகழும் வேலையில் மேற்கத்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.  

மிகநீண்ட கடல் எல்லையைக் கொண்ட நமீபியாவின் கடல் வளங்களையும், அவைதான் அள்ளிச் செல்கின்றன. நமீபியாவின் மொத்த சனத்தொகை வெறும் இரண்டு மில்லியன்கள். ஆயினும், குறைந்தது 50 % மான மக்கள், வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடுகின்றனர்.  

அவர்களில் அநேகமானோர் ஆபிரிக்க கறுப்பின மக்கள். நமீபியாவின் இரண்டு மில்லியன் மக்களின் வாழ்வை மேம்படுத்துவது முடியாத காரியமாக, உண்மையில் அவர்கள் மறைக்க விரும்புவது, பெருமளவு செல்வத்தை ஒரு சிறிய பணக்காரக்கும்பல் மட்டுமே அனுபவிக்கிறது என்பதைத் தான். நமீபியாவின் மொத்த சனத்தொகையில் 6 % மாக உள்ள மேற்குலக ஐரோப்பியர்கள் 90 % தேச உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More