Sunday, October 25, 2020

இதையும் படிங்க

பாவப்பட்ட பட்டதாரிகள் | வீரகேசரியின் ஆதங்கம்

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் பெரும் போராட்டத்தின் மத்தியில் கல்வியை நிறைவு செய்த பட்டதாரிகள், தொழில் வாய்ப்புக்காக தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்

மூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை "தியாகர் வயல்" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்

இது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 1 | மகாலிங்கம் பத்மநாபன்

பெரிய பரந்தன் கதை இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் "ஒரு பேப்பர்"...

ஆறாத ரணம் |வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்!

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. 

சீனாவின் ஊடுருவலை தடுக்க செய்மதிகளை கோரும் இந்தியா

சீனாவின் படைகளை கண்காணி க்கும் வகையில் இந்தியாவின் இராணுவம் மொத்தம் 6 தனி செய்மதிகளை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.இந்தியா_ சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே...

ஆசிரியர்

சிங்கள அரசின் மறுப்புக்கு மறுப்பு: ஈழம் இலங்கையின் பூர்வீகப்பெயர்

#Sri Lanka #Northern Province #United Kingdom
ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் தலையாய கடமையாகும் என கட்டுரையாளர் அ.மயூரன், M.A தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

அதிலும் குறிப்பாக எம்மினத்திலிருக்கக்கூடிய வரலாற்றாய்வாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. இற்றைவரையும் இலங்கையின் வரலாற்றை கி.மு.5ஆம் நூற்றாண்டில் விஜயனின் வருகையுடன் ஆரம்பிப்பதாக சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூறிவந்த பொய்யான கற்பனையான வரலாற்றை முற்றுமுழுதாக மறுதலிக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த வரலாற்று ஆய்வுகளை செய்யவேண்டிது காலத்தின் தேவையாகும்.

அண்மையில் பிரித்தானியாவிலுள்ள கார்டியன் பத்திரிகையில் (07.05.2020) உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா மான் பிறைடே (Travel Quiz; do you know your island Man Friday) என்ற புதிர்பகுதியில் எழுப்பப்பட்டிருந்த ”Eelam is an indigenous name for which popular holiday island? என்ற கேள்விக்கு அதாவது ஈழம் என்ற பூர்வீகப் பெயர் கொண்ட பிரபலமான சுற்றுலாத்தீவு எது? என்ற கேள்விக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பிரித்தானியாவுக்கான இலங்கைத்தூதரகம் (15.05.2020) 1976 ஆண்டு உருவான விடுதலைப்புலிகள் அமைப்பின் சித்தாந்தமே ஈழம் எனவும் மாறாக ஈழம் என்ற பெயர் ஒருபோதும் இலங்கையின் பூர்வீகப் பெயராகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டு அதன் தூதுவர் சறோஜினி சிறிசேனவின் கையெழுத்துடன் கார்டியன் பத்திரிகைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

ஈழத்தமிழரின் வரலாற்றுத் தொன்மையின் மூலத்தை ஆராய்வதன் மூலம் வரலாற்றுக் காலங்களில் ஈழம் என்ற பெயரின் பயன்பாட்டை அறியலாம். ஈழம் என்ற பெயர் இலங்கைக்கு ஆரம்ப காலங்களிலிருந்து வழங்கப்பட்டு வந்தது என்பதை இலங்கையரசாங்கம் வெளியிட்ட பாடப்புத்தகங்களில் பல இடங்களில் காணலாம்.

அவ்வாறே இலங்கையின் தமிழில் உள்ள தேசிய கீதத்தில் ஈழம் என்ற பெயர் காணப்படுவதனைக் காணலாம் அவை

“..ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ நமோ தாயே” என வருகிறது.

அத்தோடு இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்களும் நிரூபித்திருக்கிறது. பொதுவாக ஈழத்தினுடைய வரலாற்றினை எழுத முனையும் இலங்கை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் “ஈழம்” என்ற பெயரை தவிர்த்து இலங்கை என்ற பெயரையே பாவிப்பதனைக் காணலாம்.

அதேநேரம் அவர்கள் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றவுடன் ஈழம் என்ற பெயரை அடிக்கடி பாவித்திருப்பதனைக் காணமுடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் தகைசார் அறிஞர்கள் மாத்திரம் ஈழம் என்ற பெயரை பொதுவாகவே தமது ஆய்வுநூல்களில் பயன்படுத்துகின்றார்கள்.

ஈழம் என்ற பெயர் எவ்வாறு வரலாற்றுக்காலங்களில் அழைக்கப்பட்டது என்பதனை தொல்லியல், மற்றும் கல்வெட்டியல் ஆய்வியல் நோக்கில் பார்க்கின்றபோது பூநகரி மண்ணித்தலையில் 1992 ஆண்டு பேரா.பரமு புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இரண்டு எழுத்துக்கள் கொண்ட இரண்டு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் காலக் கணிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ் இரண்டு மட்பாண்டங்களில் “ஈலா” என்ற எழுத்துப்பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் முக்கியமானவை. இதில் இரண்டு எழுத்துக்களை உடைய முதலாவது சாசனம் உடைந்த நிலையில் “ஈ” என்ற ஒலிப்பெறுமானம் கொண்ட எழுத்தும், இரண்டாவது மட்பாண்டத்தில் “ல” என்ற பெறுமானம் கொண்ட எழுத்தும் காணப்படுவதாகவும், இவ்விரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியை நோக்கும்போது இடையில் வேறு எழுத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே பொருந்தக்கூடிய இரண்டு மட்பாண்டங்களையும் சேர்த்து வாசிக்கும் போது முதல் மண்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ஈ” என்ற ஒலியும், இரண்டாவது மட்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ல” என்ற ஒலியையும் சேர்த்து ‘ஈல” அல்லது ‘ஈலெ” என்றும் வாசிக்கமுடியும் என்கிறார் பேரா.புஸ்பரட்ணம்.

மேலும் அங்கு கிடைத்த மற்றுமொரு சாசனத்தில் மூன்று எழுத்துக்கள் காணப்படுகின்றன எனவும் இதன் முதலெழுத்திற்கு ‘ஈ” என்ற ஒலிப்பெறுமானமும், இரண்டாவது எழுத்திற்கு ‘ழ” என்ற ஒலிப்பெறுமானமும் கொடுத்து ‘ஈழ” என வாசிக்க முடியும் எனவும் அவ்விரு எழுத்துக்களைத் தொடர்ந்து மூன்றாவது எழுத்து சிறு கோட்டினை மட்டும் கொண்டிருப்பதால் இவ்விரு எழுத்துக்களையும் நோக்கும் போது இது இலங்கையின் புனைபெயரான ஈழத்தையே குறிக்கின்றது என்றும் பேரா.பரமு புஸ்பரட்ணம் தனது பூநகரி தொல்பொருளாய்வு நூலில் கூறியுள்ளார்.

மேலும் இங்கு காணப்பட்ட எழுத்துக்களை ‘வேளான்” ‘ஈழ” என புகழ்பெற்ற மறைந்த கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் வாசித்ததாகவும், இதன் காலம் கி.மு 2 என அவர் கணித்திருந்ததாகவும், தமிழ் எழுத்தின் தோற்றம் (பக்7) பேரா புஸ்பரட்ணம் எழுதியுள்ளார்.

இதுவே ஈழ என்ற பெயரிலமைந்த கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் தொல்பொருட்சான்றாகும்.

அடுத்து அனுராதபுரத்திலுள்ள அபயகிரி விகாரையில் உள்ள பாறைக்கல்வெட்டில் உள்ள கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி சாசனமானது (இல.94) மூன்று வரிகளைக் கொண்டது. இதில் முதல் வரியில் “ஈழ பரதகி தமிட சமணநே கரிதே தமிட கபதிகந பசதே” என்ற தமிழ்பிராமியும், அசோகப்பிராமியும் கலந்த பிராகிருத வசனத்தில் ஈழபரத என்ற சமணனால் உருவாக்கப்பட்ட தமிழ்வீடு என்று வருகிறது.

இதை வாசித்த பரணவிதான இலா பரதகி என தவறாக வாசித்துள்ளார் இதனை பின்னர் பேராசிரியர் வேலுப்பிள்ளை தமிழ் பிராமியிலமைந்த இந்தக் கல்வெட்டானது “ஈழபரத” (ஈழத்துப்பரதவர்) என வாசித்து ஈழபரதத்தில் வாழும் தமிழ்ச் சமணரும், தமிழ்க் குடும்பத்தலைவனும் கட்டுவித்த மாடம் என விளக்கமளித்துள்ளார்.

இது ஈழம் எனப்பட்டது முழு இலங்கையையும் அழைத்திருந்தமைக்கான சான்றாகும்.

மகாவம்சம் கி.பி 1 ஆம் நூற்றாண்டில் (95 – 101) ஈழநாகன் என்பவன் 6 ஆண்டுகள் அனுராதபுரத்தை ஆண்டதாகவும், இந்த ஈழநாக என்ற அரசனின் பெயர் ராஜவலிய என்ற நூலில் எலுநாக, எலுந்நாக என பதியப்பட்டுள்ளது. பண்டைய ஈழத்தில் தமிழர் தமிழர் (பக்.48) என்னும் நூலில் சி.க சி;ற்றம்பலம் அவர்கள் எழு, ஈழ என்பன ஒரே பொருள் கொண்ட ஒன்றிலிருந்து திரிபடைந்த பதங்கள் என்கிறார்.

இதிலிருந்து மகாவம்சம், ராஜவலிய ஆகிய சிங்கள வாரலாற்று நூல்களே ஈழம் என்கின்ற பெயர் பெயரில் ஆண்ட ஈழமண்ணின் மைந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் (கல்:- 03) “எருகாடூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் செய்த ஆய்சயன் நெடுஞ்சாதன்” என்ற வரி வருகிறது இது எருகாட்டூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் திருப்பரங்குன்றத்து சைன மதகுருவுக்கு தானம் வழங்கியது பற்றிய குறிப்பை சொல்லுகிறது.

இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழமென அழைக்கப்பட்டதற்கு சான்றாகிறது. இதன் கல்வெட்டினை கீழே நோக்குக.

மேலும் ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கின்றது என்பதற்கு தமிழகத்தில் சங்ககாலத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுந்த பட்டிணப்பாலை காவிரிப்பூம்பட்டினத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விபரிக்கும் பொழுது (வரி 190 -192)* ‘கங்கை வாரியும், காவிரிப்பயனும், ஈழத்துணவும், காழகத்து ஆக்கமும்” .. எனப்புகழ்ந்துரைக்கின்றது. இது முழு ஈழத்தையும் குறிப்பனவாகவே அமைகின்றது. பட்டிணப்பாலை எழுந்த காலத்தில் ஈழம் என்னும் நாட்டின் பெயர் தமிழகத்தில் நன்கு அறிமுகமாகிவிட்டதனை அறியலாம்.

சுப்பிரமணியன்.அ.வே, சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, பக.450, 2010. கலிங்கத்துப் பரணியிலும் அதன் வரி 200 இல் ஈழமும் தமிழ்க் கூடலும் சிதைந்து.. என இடம்பெறுகிறது. இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்றாக அமைகிறது. அத்துடன் கடியலூர் உருத்திரன் கண்ணனாரின் காலத்தில் ஈழமென்பது இலங்கையின் வடபகுதியினை மட்டும் குறித்ததென்பதை கருத முடியுமென பேரா.சி.பத்மநாதன் தனது யாழ்ப்பாண இராச்சியம் நூலில் (பக்05) குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இற்றைக்கு 12000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கில் யூப்பிரட்டீஸ் நதிக்கரையோரம் உருவாகிய மொசப்பத்தோமிய நாகரிகத்தில் ஈரானின் தென்மேற்குப்பகுதியில் அதாவது சுமேரியாவின் கிழக்கே ஸாகுரொஸ் மலைத்தொடத் தொடருக்குத் தெற்கே உருவாகிய நாகரிகமே “இலம்” (ELAM) எனப்பட்டது.

இவர்கள் உருவாக்கிய நகரங்களான ஊர், சூசா என்பவற்றைச் சொல்லலாம். சுமேரியமும், இலமும் தனித்தனி நாடுகளாக விளங்கின. இவர்கள் உருவாக்கிய மொழி ஆதி இலமைற் (Proto Elamite) எனப்பட்டது. பின்னர் இலத்தின் தலைநகரான ஊர் சுமேரியர் வசமானது. இந்த இலம் நாடு இன்றைய குஸிஸ்தானாகும்.

பின்னர் சுமேரிய நகரங்களை அக்காடியர்கள் கைப்பற்றினர். இதன்பின்னர் அக்காடிய மூன்றாவது அரசமுறை மன்னனான ஷுல்கி என்பவன் இலத்தை கைப்பற்ற, அதை மீண்டும் இலவர்கள் திரண்டெழுந்து கைப்பற்றினர்.

பின்னர் பின்னர் கி.மு.18 ஆம் நூற்றாண்டில் பபிலோனியர்கள் சுமேரியத்தையும், இலத்தையும் கைப்பற்றி பபிலோனிய நாகரிகத்தை உருவாக்க கி.மு.17 இல் இலவர்களின் மூவாயிரமாண்டு சரித்திரம் முடிவுற இவர்கள் கி.மு 9000 இல் இந்தியாவுக்கு வந்தனர் என நவீன மரபணுவியல்கள் நிரூபிக்கின்றன. இவர்களினுடைய மரபணுவியல் குறியீடு M172 ஆகும்.

இந்த இலம் மொழிக்கு நெருக்கமான மொழி சங்ககாலத் தமிழாகும் என டேவிட் மக்அல்பின் குறிப்பிடுகின்றார். இதை அவர் ”…among all the Dravidian languages, the Samgam Tamil is most close to middle Elamite than any of its peer” (David McAlpan 1981) எனவே இலமக்கள் வந்திருந்து தங்கியதனால் இலங்கை ஈழமென அழைக்கப்பட்டது எனக்கூறுவர் மானிடவியலாளர்கள்.

தமிழின் தலை மொழி எழு இதனாலேயே தாய்மொழியை வரைவதற்கு எழுத்து என்றும் அதன் பணியை எழுது என்றும் மொழி ஆராய்ச்சி நிபுணர் வண.டேவிட் அவர்கள் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

வணபிதா டொக்.சேவியர் தமிழின் தாய்மொழியான மூலத்திராவிட மொழியின் பெயர் எழுத்து என்கிறார். இதற்கு எழு மொழியிலிருந்த பெரும்பாலான சொற்கள் தமிழ் மொழியில் உள்ளன என்றும், பிராகிருத மொழிகளில் ஒன்றான அர்த்தமாகதியில் தமிழ்மொழி “தெமெழு” என்று பதிவாகியுள்ளன என்றும், இந்தியாவின் தென் புறம் பேசப்பட்ட மொழியாதலால் அது அவ் எழுமொழி தெம் எழு ஆகிற்று என்றும். இதனாலேயே அன்றைய அர்த்தமா கதியில் எழு மொழி தெமெழு எனப்பதிவாகியுள்ளதாகவும். சிங்களவர்கள் இன்றும் தமிழர்களை தெமெலா என அழைக்கின்றனர் எனவும் கூறுகிறார்.

அத்துடன் சிந்துவெளி, ஹரப்பா அமைந்திருந்த நாடு பபிலோனியக் களிமண் வில்லைகளில் அக்காடிய மொழியில் “மெழுகா” எனப் பதியப்பட்டிருக்கிறது. இது திராவிட மொழிகளில் எழு மக்களின் நாடு எனப் பொருள்படும் மா எழு அகம் என்ற பதமே அக்காடிய மொழியில் மெழுகா என ஆகியிருக்கிறது என்றும், தென் பகுதியில் பேசப்பட்ட தெமெழு தமிழ் எனப் பெயர் பெற்றது என்றும், எழுமக்கள் வாழ்ந்த இலங்கைத்தீவு “எழு அகம்” எனப்பட்டது அப்பதமே காலப்போக்கில் ஈழகம் ஆகி பின்னர் “ஈழம்” எனவானது எனக்கருதுகின்றார்.

இதை பரணவிதான ஆதியில் இலங்கையில் எளு மொழி பேசப்பட்டதாகவும், அம்மொழியே இலங்கைப் பிராமிகளில் ஹெள எனப் பதியப்பட்டிருப்பதாகவும், ஹெள என்ற பதமே சிங்கள இனக்குழுவை பிரதிபலிப்பதாகக் கூறுகிறார். எது எப்படியோ ஈழம் என்கின்ற பெயரின் முன்னோடி இவற்றிலிருந்து வந்ததாக கருதஇடமுண்டு இங்கு சேவியர் குறிப்பிடும் எழு மொழியும், பரணவிதான குறிப்பிடும் எளு மொழியும் ஒன்றாக இருந்திருக்க சந்தர்பம் அதிகமாகும்.

மேலும் சங்கப்பாடல் பாடிய புலவர்களின் ஒருவராக கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஈழத்துப் பூதந்தேவனார்” எனப்படுபவர் காணப்படுகின்றார்.

இவர் அகநானூறில் மூன்று பாடல்களையும், குறுந்தொகையில் மூன்று பாடல்களையும், நற்றிவீணியில் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார் என சங்க நூல்கல் கூறுகின்றன.

இவரது பெயரின் முன்னுள்ள ஈழம் என்ற பெயர் ஒட்டுமொத்த இலங்கையையும் குறிப்பதாக அமைகிறது. இதே காலப்பகுதியைச் சேர்ந்த ஈழத்துப் பிராமிக்கல்வெட்டுக்களில் பூதன், பூத, பூதி ஆகிய பெயர்கள் வருகின்றன. பல்லவர்காலத்தில் ஈழம் பற்றிய மிகப்பழைய குறிப்பு வருகிறது. அது “ஈழம்பூட்சி” என்ற கூட்டுமொழியில் வருகிறது. ஈழம்பூட்சி என்பது ஒரு வகையான வரி. அதாவது இச்சொல் கள்ளினை உற்பத்தி செய்வோர்களிடமிருந்து அறவிடப்படும் வரியைக்குறிக்கிறது. இதனால் கள் உற்பத்தி செய்பவர்களை “ஈழவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாதாராகவும்” என்று சில நலமானியங்கள் தொடர்பாக சாசனங்களிற் குறிப்பிருக்கின்றது. இது தற்போது பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமம் முன்னொருகாலத்தில் ஈழவூர் என அழைக்கப்பட்டதை அங்கு பெறப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளிலிருந்து அறிய முடிகிறது.

அண்மைக்காலத்தில் ஈழம் என்பது பனையோடு தொடர்புடைய பெயராக அறியப்பட்டுள்ளது. பேராசிரியர் சி.பத்மநாதன் பெருங்கற் பண்பாட்டு மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தியபொழுது அங்கு பனைமரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதனால் அவற்றை ஈழம் எனக்குறிப்பிட்டனர்.

சேது சமுத்திரம் என வழங்கும் கடற்பரப்பின் கரைகளிலும் வாழ்ந்தவர்கள் ஈழம் என்ற நாட்டின் பெயராக பயன்படுத்தினர் என தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு (2011) என்னும் நூலில் எழுதியுள்ளார்.

பேராசிரியர்.க.இந்திரபாலா இலங்கையில் தமிழர் (2004) பக்.338 இல் இன்று தென்னை, தெங்கு எனப்படும் மரப்பெயருக்கு பழந்தமிழில் ஈழம் என்றொரு இன்னொரு பெயரும் இருந்ததாகச் சொல்லுகின்றார். இச்சொற்களனைத்தும் இலங்கைத்தீவின் இன்னொரு பெயராகிய ஈழம் என்ற பெயருடன் தொடர்புபட்டிருப்பதைக் காணலாம் என்கிறார்.

இலங்கையிலிருந்து வந்த மரம் என்ற பொருளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னைக்கு ஈழமரம் என்ற பெயரும் இருந்தது. அந்த மரத்தில் காய்க்கும் காய்க்கு ஈழக்காய் என்றும், அக்காயிலுள்ள நீருக்கு ஈழநீர் என்றும் வழங்கபட்டிருந்ததாகவும், இந்த ஈழநீர் மருவி இளநீராக இன்றுவரை வழங்கப்படுவதையும், ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் தென்னிந்தியாவில் ஒரு தனிச்சமுகப்பிரிவாக ஈழவர் என்ற பிரிவு இருந்தனர் என்பதை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன என்றும் பேரா.இந்திரபாலா குறிப்பிடுகின்றார்.

அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்குள்ள ஆலயமொன்றுக்கு 30 ஈழக்காசுகள் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி பற்றிக்கூறுகிறது. அதேபோல் பராந்தக சோழன்காலத்தில் வேலூரில் பாண்டிர்களுக்கு எதிரான போரில் ஈழத்து ஆட்சியாளனாக ஈழத்து மன்னன் சென்று போரிட்டான் இதை “ஈழத்து ஆரியன்” என சோழக்கல்வெட்டுக்கள் பதிவு செய்வதை பேரா.நீலகண்டசாஸ்திரி அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

ஈழம் என்ற பெயர் சிலஇடங்களில் இலங்கையின் முழுப்பகுதியையும் பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் வடபாகத்தையும் குறித்து நிற்கிறது. கி.பி.9ஆம் நூற்றண்டிற்குரிய உதயணன் பெருங்காதையிலும், அதன்பின்னான நன்னூல் மயிலைநாதர் உரையிலும் இலங்கையானது ஈழம், சிங்களம், இலங்கை என வேறுபடுத்தி கூறப்பட்டுள்ளது.

ஒரே வரலாற்று மூலத்தில் ஓரினத்தின் பெயராலேயே சிங்களநாடு கூறப்பட்டு அதே வரலாற்று மூலத்தில் ஈழம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

பிற்பட்ட பாண்டியக் கல்வெட்டில் இந்த ஈழம் வட இலங்கையையும், விஜய நகரக்கல்வெட்டில் யாழ்ப்பாணத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களில் வரும் இந்த ஈழம் பற்றிய குறிப்புக்கள் பிற இலங்கை வரலாற்று மூலங்கள் எவற்றிலும் காணப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து கி.பி 10 நூற்றாண்டில் (993) ஈழம் சோழர்கள் வசமானதால் அது சோழர்களின் ஆட்சிமண்டலங்களில் ஒன்றானது. இதனால் இதை “ஈழமான மும்முடிச்சோழ மண்டலம்” என அழைத்தனர்.

முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள் “எண்திசை புகழ்தர ஈழ மண்டலமும்” எனப்புகழ்கிறது. இதன்போது ஈழத்திலும் “ஈழவளநாட்டு வரி” என்றொரு வரிமுறையையும் சோழர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அத்துடன் 10ஆம் நூற்றாண்டுகால சோழக்கல்வெட்டுக்களில் “ஈழக்காசு, ஈழக்கருங்காசு” பற்றிய செய்திகள் காணப்படுகிறது.

சோழர் ஈழத்தை வெற்றிகொண்டதன் நினைவாக ஈழக்காசு, ஈழக்கருங்காசு என்ற பெயரில் நாணயங்கள் வெளியிட்டதை சோழர் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரம் மாந்தைக் கல்வெட்டில் தமிழகம் சோழமண்டலத்தைச் சேர்ந்த ஒரு நிலக்கிளாந்தர் ஈழத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு நன்கொடை அளித்திருப்பதாக உள்ளது. இக்கல்வெட்டை கிருஸ்ணசாஸ்திரி அவர்கள் வாசித்து படியெடுத்துள்ளார். (கிருஸ்ண சாஸ்திரி 1923)

இக்கல்வெட்டு தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ளது. எனவே 11 ஆம் நூற்றாண்டிலும் இலங்கையில் ஈழம் என்கின்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மாதோட்டம் கல்வெட்டு சான்றுபகர்கின்றது.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழனின் சாசனத்தில் “முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும்” எனவும், இராசாதிராசன் 1 கல்வெட்டுக்கள் மதுரையும் ஈழமும் கொண்டவன்” என்றும், மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள் “சிங்களவன் தலைமையாற் தென்னீழங் கொள்கவென்னத் திரைகடலை அடைக்கவென்ன” எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதானது. ஈழம் என்கின்ற பெயர் முழு இலங்கைக்கும் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிறது.

மேலும் முத்தள்ளாயிரம் என்ற இலக்கியத் தொகைநூலானது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பலரும் கருதுவர். இது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட 2700 பாடல்களைக்கொண்ட தொகுப்பாகும். கோழி என்னும் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரியும் கிள்ளிவளவனின் யானையானது போர் புரியும் விதத்தை பாடும்போது “கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிறையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேதங் கோழியர் கோக்கிள்ளி கயிறு” என்று பாடுகிறார் கவிஞர். (எஸ்.வையாபுரிப்பிள்ளை 1943)

இங்கு கிள்ளிவளவனின் யானை ஈழத்திலும் ஒரு காலை வைத்து போரிட்டதாம் என்பதிலிருந்து இலங்கை ஈழம் என அழைக்கப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாடவர்மன் சுந்தரபாண்டடியனின் இளைய சகோதரன் வீரபாண்டியன் (1253 – 1273) ஈழத்தின் மீது படையெடுத்தனை அவனது மெய்க்கீர்த்தி கூறும்போது “சோனேடும் ஈழமுங்கொண்டு சாவகன் முடியும், முடித்தலையும் கொண்டருளிய வீரபாண்டிய தேவர்க்கு….” என வருகிறது.

இதில் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயரைப் பாவிப்பதனை அறியலாம். அதேபோல் ஈழத்தின் மீது படையெடுத்து அங்கு ஆட்சிசெய்த சாவகமன்னனை வெற்றி கொண்டதாக கொங்குநாட்டு வீரபாண்டியன் கல்வெட்டிலும் கூறப்படுகிறது.

“கொங்கீழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து கங்கை இருகரையும் காவீரியும் கொண்டு” என்னும் வரிகளினூடாக தெளிவுபடுத்துகிறது.

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படும் தட்சிண கைலாசபுராணம் திருக்கோணேஸ்வர வரலாற்றுப் படைப்பு பற்றிக்கூறுமிடத்து அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஜயவீரசிங்கை ஆரியனுக்கு (1380 – 1410) இந்தப் படைப்புரிமை வழங்கப்பட்டதாகவும், ஈழத்தை இந்தக் கோயிலின் நாடு என்று அழைக்கப்படுவதாகவும் தட்சிண கைலாய புராணம் கூறுகிறது.

கி.பி.1607 இல் சேதுபதிகள் பட்டையத்தில் “ஈழமுங் கொங்கும் யாழ்ப்பாணப் பட்டணமும்” என்று வருகிறது. இது ஈழத்தில் யாழ்ப்பாணம் தனியான பகுதி என்பதனைக் காட்டிநிற்கிறது (தஞ்சை மராட்டியர் செப்பேடு, செ.இராசு. பக்.69, 1963) 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் (1716 – 1780) அவர்களால் சுழிபுரம் பறாளைவிநாயகர் மீது பாடப்பட்ட பறாளை விநாயகர் பள்ளிலே பள்ளனின் மனைவிகளான ஈழமண்டலப் பள்ளி, சோழமண்டலப்பள்ளி என இருவரின் கதாபாத்திரங்களின் மூலம் ஈழமண்டலச் சிறப்பையும், சோழமண்டலச் சிறப்பையும் சின்னத்தம்பிப் புலவர் பாடுகிறார். மூத்தவளான ஈழமண்டலப்பள்ளி தம் வரலாற்றைக் கூறும் போது “ஈழமண்டலத்தினிற் பள்ளி நானே” என்றும், அவள் தம் நாட்டுவளம் பற்றி பாடும் பாடல்களின் இறுதியில் “ஈழமண்டல நாடேங்க நாடே” என்று பாடுகிறார்.

இது இலங்கையை ஈழமண்டலம் எனப்புகழ்ந்து அதன் சிறப்புக்களைப்பாடுகிறது.

கி.பி.19ஆம் நூற்றாண்டில் மட்டுவில் ம.க.வேற்பிள்ளை (1848) அவர்களால் “ஈழமண்டலச் சதகம்” என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் இந்தியாவில் இருந்த சமயத்தில் ஈழத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை எடுத்துச்சொல்லும் முகமாக ஈழமண்டலச் சதகம் ம.க.வேற்பிள்ளையினால் இயற்றப்பட்டதாகும். அதனைத் தொடர்ந்து வித்துவசிரோமணி கணேசய்யர் அவர்களும் தாம் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் “இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்று” கூறுகின்றார்.

ஈழகேசரி பத்திரிகையும் ஈழம் என்ற பெயரில் 1976 இற்கு முன்னரே வெளிவந்திருப்பதனையும் நோக்கத்தக்கது.

சி.வை.தாமோதரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர் முதலானோரும் ஈழம் என்ற பெயரை பயன்படுத்தியிருந்தமையைக் காணலாம்.

1957 ஆம் ஆண்டு தமிழருக்கு தனிநாடு கேட்டு ‘ஆ.தியாகராஜா ‘ “இருபத்தினான்கு லட்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும்” என்ற நூலினை எழுதினார். இது பதுளையையும் உள்ளடக்கியது. இதன் படி முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இதன்பின்னர் சி.சுந்தரலிங்கம் 1964 ஆம் ஆண்டு ஈழத்தின் அவசியத்தை உணர்ந்தவராக எழுத்து மூலமாக Eylom: Beginings of freedom Struggle என்ற நூலை எழுதுகின்றார். இதுவே தமிழீழம் வேண்டும் என எழுதப்பட்ட முதலாவது நூலாகும்.

அதனைத் தொடர்ந்து 1976 மே 14ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் சாத்வீக வழியில் போராடிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் “தமிழரின் விடிவிற்கும், விமோசனத்திற்கும் ஒரேவழி சிங்கள தேசத்திலிருந்து பிரிந்து சென்று தமிழீழத்தை அமைப்பதுதான் முடிந்த முடிவென்றும் இதனைக் கூட்டணியினர் சாத்வீக வழியில் போராட முடியாவிட்டால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”.

இந்தவகையிற்தான் தமிழர் அரசியல் தலைமைகள் எடுத்த முடிவுகளை இளைஞர்கள் நடைமுறைப்படுத்த முனைந்தமைதான் தமிழீழவிடுதலை ஆயுதப்போராட்டமாகப் பரிணமித்ததை கடந்தகால வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு எதிராக தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டபோதுதான் ஈழம் என்ற சொல் இந்த சிங்களப் பேரினவாதத்திற்கு கசப்புக்குரிய சொல்லாக மாறிவிட்டது.

இந்தக் கசப்பின் வெளிப்பாடுதான் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கு எதிர்வினையாக தூதுவர் எழுதியதைக்காணலாம். இதிலிருந்து இன ஒடுக்குமுறையினதும், இன அழிப்பினதும் மூர்க்கத்தை உணரமுடிகிறது. இவ்வாறுதான் இலங்கையில் தமிழர் சார்ந்த அனைத்து வரலாற்று, தொல்லியல், பண்பாட்டு, சிதைவுகளை மேற்கொண்டு சிங்களதேசம் தமிழினப்படுகொலையை முன்னெடுத்து வருகிறது.

அடிக்குறிப்புக்கள்

இந்திரபாலா.க. இலங்கையில் தமிழர் (ஓர் இனக்குழு ஆ;க்கம் பெற்ற வரலாறு), குமரன் புத்தக இல்லம் கொழும்பு, 2004

இராசு, செ. தஞ்சை மராட்டியர் செப்பேடு, பபக்.69, 1963 சிற்றம்பலம்.சி.க, பண்டைய ஈழத்தில் தமிழர் – ஒரு பன்முகப்பார்வை, யாழ், 2001,

சிற்றம்பலம்.சி.க, பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும், சிந்தனை இதழ், யாழ்.பல்கவைக்கழகம், 1985, பக்.24 -25,

சின்னத்தம்பிபுலவர், நல்லூர், பறாளை விநாயகர் பள்ளு, பிரதேசசபை. சங்கானை, 2016 செல்வநாயகம்.அ. ஈழரும் தமிழரும் பக்.02

பத்மநாதன்.சி, யாழ்ப்பாண இராச்சியம் (ஒரு சுருக்க வரலாறு) குமரன் புத்தக இல்லம், 2011.

புஸ்பரட்ணம் ப. இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, கல்விச்சோலை சுவிச்சர்லாந்து. 2017,

புஸ்பரட்ணம்.ப, பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு. 1993,

புஸ்பரட்ணம்.ப, தமிழ் எழுத்தின் தோற்றம் (ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு) பவனி பதிப்பகம், யாழ், 2004

தியாகராஜா.எஸ், ஈழத்தமிழரின் ஆதிச்சுவடுகள். தேசம் வெளியீடு, 2004.

கந்தையாப்பிள்ளை.ந.சி, கலிங்கத்துப்பரணி, ஆசிரியர் நூற்பதிப்புக்கழகம், நவாலி, 1938.

நடன காசிநாதன், சோழர் கால செப்பேடுகள், பக்144.

நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்திய வரலாறு, 1966.

வேலுப்பிள்ளை.ஆ. தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும், அவற்றின்

வரலாற்றுப்பின்னணியும், யாழ்ப்பாணம் 1986, பக்.10,

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

மொகல் ஈ ஆஸம் - திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் ( தோல்வி) கதை

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 5 | பத்மநாபன் மகாலிங்கம்

கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும்,...

கொரோனாவால் ட்ரம்ப் கடுமையாக பாதிக்கப் பட்டால் என்ன நேரும்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

தொடர்புச் செய்திகள்

நியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவுத் தொகையை கோரியது இலங்கை

இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த...

20ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த...

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பத்திரம் அமைச்சரவையில்

19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று (புதன்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பதிவுகள்

கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி - மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜீவித்குமார், பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு...

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி

ஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

தமிழகத்தில் 7 இலட்சம் பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 193 ஆக உயா்ந்துள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஈழத்தமிழர் வனுஷி வோல்டேர்ஸ்

ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்படுவதற்கு முன்பே, ஐந்து வயதாக இருக்கும்போதே புலம்பெயர்ந்துவிட்ட வனுஷி,...

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

பிந்திய செய்திகள்

புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...

மட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

ஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு

ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...

களுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...

நாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற...

துயர் பகிர்வு