Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை

1 minutes read

லித்­து­வே­னி­யாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்­ஸாண்டர் சோரோகின், 24 மணித்­தி­யா­லங்­களில் 319.6 கிலோ­மீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்­துள்ளார்.

41 வய­தான சோரோகின் சானியா எனும் பெய­ரிலும் அழைக்­கப்­ப­டு­கிறார். 24 மணித்­தி­யா­லங்­களில் அதிக தூரம் ஓடும் ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப் போட்டி இத்­தா­லியின் வெரோனா நகரில் அண்­மையில் நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் 319.6 கிலோ­மீற்றர் ஓடிய சோரோகின், முத­லிடம் பெற்­ற­துடன் புதிய உலக சாதனை படைத்தார். சரா­ச­ரி­யாக மணித்­தி­யா­லத்­துக்கு 12.89 கிலோ­மீற்றர் வேகத்தில் அவர் ஓடினார்.

தனது சொந்த சாத­னை­யையே சொரோகின் முறி­ய­டித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 309.9 கிலோ­மீற்றர் தூரம் ஓடி உலக சாதனை படைத்­தி­ருந்தார்.

அலெக்­ஸாண்டர் சோரோ­கி­னுக்கு முன்னர் இத்­த­கைய ஓட்­டத்தில் உலக சாத­னை­யா­ள­ராக விளங்­கி­யவர் கிறீஸ் நாட்டைச் சேர்ந்த யியானிஸ் கவ்ரோஸ் ஆவார். அவர் 1997 ஆம் ஆண்டு 24 மணித்­தி­யா­லங்­களில் 304.4 கிலோ­மீற்றர் தூரம் ஓடி உலக சாதனை படைத்­தி­ருந்தார்.

இம்­முறை வெரோனா நகரில் நடை­பெற்ற போட்­டியில் போலந்தின் அன்ட்ஸேஜ் பியோட்­ரோவ்ஸ்கி 301.85 கிலோ­மீற்றர் தூரம் ஓடி இரண்­டா­வ­மி­டத்­தையும் இத்­தா­லியின் மெக்ரோ 288.43 கிலோ­மீற்றர் தூரம் ஓடி 3 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.

மிக நீண்ட தூர ஓட்­டத்தில் உலகின் முன்­னிலை வீர­ராக திகழும் அலெக்­ஸாண்டர் சோரோகின் 2013 ஆம் ஆண்­டுதான் ஓட்­டங்­களில் பங்­கு­பற்ற ஆரம்­பித்தார். உடல் எடையைக் குறைப்­ப­தற்­கா­கவே அவர் ஓட ஆரம்­பித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போட்­டிக்குப் பின்னர் கருத்துத் தெரி­வித்­துள்ள அலெக்­ஸாண்டர் சோரோகின், நான் மிக களைப்­ப­டைந்­துள்ளேன். ஆனால், இரட்­டிப்பு மகிழ்ச்­சி­ய­டைந்­துள்ளேன்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More