March 26, 2023 10:26 pm

துருக்கி நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து | 28 பேர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

துருக்கியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 28 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

வடக்கு துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கிட்டத்தட்ட 110 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் 300 மீற்றர் ஆழத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதில் 28 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பூமிக்கடியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டுவருவதற்கான மீட்புப் பணிகளை மேற்கொள்ள துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் உடனடியாக தனது உள்துறை மற்றும் எரிசக்தி அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதேவேளை, தற்போது 11 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக துருக்கியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.

சுரங்கத்தில் மீத்தேன் வாயு உருவானதே இந்த வெடி விபத்துக்கு காரணம் என்று சுரங்கத்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று சனிக்கிழமை அந்த இடத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 301 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்