Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆறு ஆண்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை; அதிர்ச்சி தகவல்

ஆறு ஆண்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை; அதிர்ச்சி தகவல்

0 minutes read

உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவிக்கின்றார்.

உலகளாவிய சுகாதார அமைப்பின் கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதனைக் கூறினார்.

‘உலகளவில் ஆறு பேரில் ஒருவர் குழந்தை பெற இயலாமையால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 17.5 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணக்கார நாடுகளில் 17.8 சதவீதம் பேரும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 16.5 சதவீதம் பேரும் குழந்தை பெற இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாடுகளின் தரவுகள் இல்லாததால், முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. எனவே இனப்பெருக்க சுகாதார கொள்கைகள், சேவைகள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை குழந்தையின்மை சிகிச்சையில் சேர்க்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More