சீனாவில் முதலாவது பறவைக் காய்ச்சல் (H3N8) மரணம் பதிவாகியுள்ளது.
குவாங்டாங் மாகாணம், ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண் ஒருவரே பறவைக் காய்ச்சலால் மரணித்துள்ளார்.
கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார்.
நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு அப்பெண், கோழிப் பண்ணை ஒன்றுக்குச் சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சல் வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சீனாவில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.