செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் புடின் மரணத்தை சபிக்கும் செலென்ஸ்கி

புடின் மரணத்தை சபிக்கும் செலென்ஸ்கி

1 minutes read

புடின்  உக்ரைன் மீதான  போரின் போக்கில்  மாற்றத்தை  கொண்டுவந்துள்ள நேரத்தில் மறுபக்கம் சாபத்தை வழங்கியிருக்கிறார்  செலென்ஸ்கி.

போரில் புதுவித ஆயுதங்களை ரசியா  கையாளுவது தெரியவந்துள்ளது.கடந்த சில வாரங்களாக உக்ரைனின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் ரசியாவின் அதிநவீன 10 போர் விமானங்கள் புதிய வகை ஆயுதங்களை வீசியுள்ளன.

இவை கிளைட் எனப்படும் சறுக்குக் குண்டுகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இறக்கைகள் பொறுத்தப்பட்டு, ஜிபிஎஸ் எனப்படும் புவி நிலைநிறுத்தமானி உதவியுடன் இயங்குபவை கிளைட் குண்டுகள்.

ரேடார்களின் கண்காணிப்பிலும், வான் பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காகவும் தாழ்வாகவும், தூரமாகவும் பயணிக்கும் இந்த வகை குண்டுகளை தனது எல்லையில் உள்ள உக்ரைனிய நகரமான பெல்கொரோட் மீது ரஷ்யா வீசியது. இதனால் பாதிப்பு கடுமையாக இருந்தது தெரியவந்துள்ளது.

இவை தெரிய வந்த நிலையில் ஹிட்லரின் நாசிப் படைகள் முன்பு தோற்கடிக்கப்பட்டதை போலவே தற்போது ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் நேசப் படைகளிடம் ஜெர்மனி சரணடைந்ததை நினைவு கூரும் நிகழ்ச்சி, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.