இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பாலஸ்தீனர்.
நீண்ட காலமாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் முகாமுக்குள் புல்டோசர்களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.