October 4, 2023 4:32 am

நடுவானில் விமான கதவை திறந்த நபர் கூறிய காரணம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தென்கொரியாவில் ஜீஜு நகரில் இருந்து டேகு நகருக்கு ஆசியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ321 என்ற ஏர்பஸ் விமானம் பயணித்தது.

விமானத்தில், மொத்தம் 194 பயணிகள் இருந்து உள்ளனர். விமானம் டேகு விமான நிலையம் நோக்கி 700 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, நடுவானில், 33 வயது நபர் ஒருவர் திடீரென விமான கதவை திறந்து உள்ளார்.

இதனையடுத்து, காற்று விரைவாக விமானத்தின் உள்ளே புகுந்து 12 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், விமானம் பாதுகாப்பாக தரையில் இறங்கியது.

விமான பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை மீறியதற்காக அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையின்போது, பயணத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால், விமானத்தில் இருந்து விரைவாக வெளியேற விரும்பினேன். அண்மையில் வேலை இழந்த பின்னர், மனஅழுத்தம் அதிகரித்து விட்டது என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட கூடும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்