September 22, 2023 5:51 am

உயிரியல் பூங்காவில் குதூகலித்த புலிக்குட்டிகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
புலிக்குட்டிகள்

அரியவகை சுமத்ரா புலிக்குட்டிகள் லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும்  முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடின.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் புலிகள், வனப்பகுதிகளில் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லண்டன் உயிரியல் பூங்காவில், கடந்தஆண்டு  ஜூன் மாதம் பிறந்த மூன்று  சுமத்ரா புலி குட்டிகளுக்கு இவ்வாறே இன்கா, ஜாக், கிறிஸ்பின் என பெயரிடப்பட்டது.

இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள சுமத்ரா புலிக்குட்டிகள், தாய் புலியின் மேற்பார்வையில் குதூகலமாகத் தண்ணீரில் விளையாடி பொழுதுபோக்கின.

சுமத்ரா புலிகள் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது சுமார் 300 சுமத்ரா புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த புலிக்குட்டிகள் மூலம், அந்த இனத்தை பாதுகாக்கும் முயற்சியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்