December 7, 2023 7:33 pm

அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக களமிறங்கிய சீனா!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமெரிக்கா ரஷ்யாவிற்கு இணையாக களமிறங்கிய சீனா

விண்வெளியில் சாதனை படைத்துள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இணையாக சீனாவும் போட்டி போட்டு வருகிறது.

சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த சீன விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில், நேற்று சீனாவின் தயுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2டி என்ற ரொக்கெட் செலுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த ரொக்கெட், அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள்கள் வணிக தொலையுணர் சேவைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை சரிபார்க்க பயன்படுத்தப்படும் என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்