இத்தாலியின் மிலான் (Milan) நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் முதியவர்கள் மரணித்துள்ளனர்.
அத்துடன், புகையை சுவாசித்த பல முதியவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டுத் தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை அதன் Twitter தளத்தில் பதிவிட்டுள்ளது.
தீ சம்பவத்தில் மரணித்த அனைவரும் 69 வயதுக்கும் 87 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்றும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது.
தீப் பரவல் சம்பவத்தின் போது இந்த முதியோர் இல்லத்தில் 210 முதியவர்கள் இருந்துள்ளனர்.