இங்கிலாந்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை செய்வதால் தண்ணீருக்கான தேவை அதிகரித்திருப்பதாக இங்கிலாந்தின் South East Water நிறுவனம் தெரிவிக்கிறது.
எனவே, பயனாளர்கள் தேவையில்லாமல் தண்ணீரைப் பயன்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, கார்களைக் கழுவுவது மற்றும் நீச்சல் குளங்களைக் நிரப்புவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்தில் கசிவுகளால் நாளொன்றுக்கு 89 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முதல்கட்டமாக 5.1 பில்லியன் டாலர் செலவில் நீர்த்தேக்கம் ஒன்று கட்டப்படவுள்ளது.
1980களுக்குப் பிறகு இங்கிலாந்தில் நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.