இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு இருதரப்பு பேச்சு நடைபெற்றது.
அப்போது, இலங்கைக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது.
அதன்படி, டோர்னியர்-228 ரக கடல்சார் கண்காணிப்பு விமானத்தை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இலங்கைக்கு இந்தியா வழங்கியது.
இந்த விமானம் கடந்த ஓர் ஆண்டு காலமாக இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியது.
அதை தொடர்ந்து வருடாந்த பாரமரிப்புக்காக டோர்னியர்-228 விமானத்தை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைந்தது.
இந்த நிலையில், பாரமரிப்புக்காக வந்துள்ள டோர்னியர்-228 விமானத்துக்கு மாற்றாக மற்றொரு டோர்னியர்-228 விமானத்தை இலங்கைக்கு இந்தியா நேற்று வழங்கியது.
காட்டுநாயக்காவில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
https://twitter.com/SriLankaTweet/status/1692021166616305995?s=20