September 28, 2023 9:32 pm

கோடிகணக்கில் ஏலம் போன அபூர்வ பருந்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கோடிகணக்கில் ஏலம் போன அபூர்வ பருந்து

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி, அடுத்த மாதம் 2ஆம் திகதி தொடங்குகிறது.

இதையொட்டி, எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது.

இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான பருந்துகள் இடம்பெற்றன.

அவற்றில் சிறந்த மற்றும் அரிய வகையான பருந்துகள் இடம்பெற்றிருந்தன.

அதில் அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று 1 மில்லியன் டொலருக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 76க்கு ஏலம் போயுள்ளது.

இந்த வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்