October 2, 2023 11:26 am

சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு மேலதிக பாதுகாப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு மேலதிக பாதுகாப்பு

சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர்.

மேலும், பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொலிஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்த இந்து அமைப்புகள் முயற்சிக்க கூடும் எனக் கூறப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்