ருவாண்டாவில் தமது வீட்டின் சமையலறையில் குழியைத் தோண்டி 10க்கும் மேற்பட்ட சடலங்களைப் புதைத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை, அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்தனர்.
34 வயதுடைய குறித்த நபர், இரவுக்கூடத்தில் சந்திக்கும் நபர்களை வாடகைக்குத் தங்கும் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு வீட்டின் சமையலறையில் இருந்து மொத்தம் 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த ஜூலை மாதத்தில் கொள்ளை, பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவரின், வீடு சோதிக்கப்பட்டதில் சமையலறையில் குழி தோண்டப்பட்டு, அதில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.