November 28, 2023 8:04 pm

கனடாவில் துப்பாக்கிச்சூடு; ஐவர் உயிரிழப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனடாவின் ஒன்டாரியோவின், (Ontario) Sault Ste. Marie நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது வீதியில் ஒருவர் இறந்து கிடந்தார்.

அதேபோல் இரு வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.

மேலும், 44 வயது நபரொருவர் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும் கணவன் – மனைவி முரண்பாடு இந்த அசம்பாவிதத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேயர் இரங்கல்

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் Marie நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், நகர மேயரான Matthew Shoemaker இரங்கல் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்