December 10, 2023 5:29 pm

அமெரிக்காவில் 22 பேரை கொலை செய்த நபரின் சடலம் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமெரிக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மைனே மாகாணம், லூயிஸ்டன் நகரில் கடந்த 25ஆம் திகதியன்று, ராபர்ட் கார்டு என்பவர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பொது இடங்களில் புகுந்து அவர் துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து முன்னாள் இராணுவ வீரரான ராபர்ட் கார்டு தப்பியொடினார். அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

அவரது வீட்டை சுற்றிச் சுற்றிவளைத்த போதும் அங்கு அவர் இருக்கவில்லை.

இதையடுத்து லூயிஸ்டன் நகர் முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

துப்பாக்கிதாரி தப்பித்தமையால் நகரிலும் பரபரப்பு நிலவியது. பொதுமக்களும் வீடுகளுக்குள் முடங்கினர்.

தொடர்புடைய செய்தி : அமெரிக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்

இந்நிலையில், 2 நாட்கள் தேடுதலின் பின்னர் லூயிஸ்டனின் தென்கிழக்கே உள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் ராபர்ட் கார்டு சடலம் கண்டெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ராபர்ட் கார்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் லூயிஸ்டன் நகரில் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்