செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

0 minutes read

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம், ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் மற்றும் 2020 உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதிப் பரீட்சையை சுகாதார அமைச்சு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் மாணவர் தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.