செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்பு மனு தாக்கல்!

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்பு மனு தாக்கல்!

1 minutes read

பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல், கடந்த 20ஆம் திகதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், முதன்முதலாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது பெயர் சவீரா பிரகாஷ். கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் (PK-25) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார்.

சவீரா பிரகாஷ், கடந்த ஆண்டு கைபர் பக்துன்காவின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தார்.

அத்துடன், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனர் மாவட்ட பெண்கள் பிரிவு பொது செயலாளராக உள்ளார்.

சவீரா பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் “தனது தந்தையின் வழியை பின்பற்றி, பின் தங்கிய மக்களுக்காக பணியாற்றுவேன். பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுவதற்காகவும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் ஐந்து சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.