Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா போலி ஓட்டுநர் உரிமத்தால் ரத்து செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை

போலி ஓட்டுநர் உரிமத்தால் ரத்து செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை

1 minutes read

போலியான ஓட்டுநர் உரிமைத்தால் ஒருவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து  செய்யப்பட்டுள்ளது.

அலி ஹைதரி எனும் ஆப்கானியர் 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்.2014ம் ஆண்டு இவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெற இவர் சமர்பித்த ஆப்கான் ஓட்டுநர் உரிமம் போலியானது எனத் தெரிய வந்துள்ளது.

லாரி ஓட்டுநராக வேலைச் செய்ய இவர் ஓட்டுநர் உரிமம் பெற்றதாகவும், ஆப்கானில் இவருக்கு லாரி ஓட்டிய அனுபவம் இல்லை என்றும்கூறப்படுகின்றது. இதன் காரணமாக, இவரது ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களிடம் பணம் கொடுத்து, போலியான ஆப்கான் ஓட்டுநர் உரிமத்தை பெற்றதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஹைதரி தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையத்திலிருந்து வெளியேறிய பிறகு வேலைத் தேடியதாகவும், அதற்கு ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டதால் இச்செயலில் ஈடுபட்டதாக ஹைதரி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

ஹைதரியின் ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து செய்யப்பட்ட நிலையில், நல்ல பண்பு இல்லாதவர் என்ற அடிப்படையில் குடியுரிமை தொடர்பான இவரது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More