மாணவர்களின் கல்வியை பாதித்துள்ள கொரோன வைரஸ்: யுனெஸ்கோ

உலகளாவிய கல்வியை கண்காணிக்கும் அமைப்பான ஐ.நா கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு அமைப்பான ( யுனெஸ்கோ ) தெரிவித்துள்ளது.கொரோன வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் 29 கோடி மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளதுடன் அவர்களின் எதிர்கால கல்விக்காக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது

சீனா, ஜப்பான், தென்கொரியா , இத்தாலி, ஈரான் உட்பட 13 நாடுகள் முழுமையாக பாடசாலைகளை மூடியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலை நடவடிக்கைகளை எடுத்துள்ள 10 நாடுகளில் முழுமையாக பாடசாலையை மூடினால் இன்னும் 18 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். கொரோனோ வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 29 கோடி மாணவர்களின் கல்வியே பாதிக்கப்பட்டுள்ளது.

உடல் நலம் மற்றும் பிற அவசர நெருக்கடிகளின் போது பாடசாலைகள் மூடுவது புதிய விடயமல்ல என்ற போதிலும் தற்போது முன்னொரு போதும் இல்லாத வேகத்தில் பாடசாலைகள் மூடப்படுகிறதென்றும், இந்நிலை தொடர்ந்து நீடித்தால் கல்வி கற்பதற்கான உரிமைக்கு ஏற்படலாமென யுனெஸ்கோவின் பொது முகாமையாளர் ஆட்ரி ஆசோலே தெரிவித்துள்ளார்.

கொரோன வைரஸ் தொடர்ந்து பரவுவதன் காரணமாக இத்தாலி எதிர்வரும் 15 ம் திகதி வரை பாடசாலைகளிற்கும் , பல்கலைகழகங்களிற்கும் விடுமுறையை அறிவித்துள்ளது.தென்கொரியாவில் பாடசாலைகளின் புதிய தவணை ஆரம்பிப்பதை பிற்போட்டுள்ளது.ஜப்பானிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஜப்பான் மூடியுள்ள அதேவேளை ஈரானில் 108 பேர் கொரோனோ வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் ஈரானும் பாடசாலைகளை முற்றாக மூடியுள்ளது.கொரோனா வைரஸால் பாடசாலைகள் மூடுவது தொடர்பாக யுனெஸ்கோ அமைப்பானது எதிர்வரும் 10ம் திகதி அவசர கூட்டத்தையும் நடத்தவுள்ளது.

ஆசிரியர்