மனிதர்களை கொண்டு அடுத்த இலக்கை சோதிக்கும் முயற்சியில் சீனா…..

புதிய விண்கலத்தை சீனா விண்ணில் ஏவ உள்ளது.இது நிலவில் விண்வெளி நிலையம் அமைப்பது, மனிதர்களை அனுப்புவது என்ற இலக்கை சோதிக்கும் வகையில்அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதையொட்டி, ஹைனான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5-பி ராக்கெட் ஏவப்பட உள்ளதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமே இதுவரை நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்