வூகான் நகரில், 3 மாதங்களுக்குப் பின், பாடசாலைக்குள் அனுமதி

சீனாவில், கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் வூகான் நகரில், 3 மாதங்களுக்குப் பின், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

உடலின் தட்ப வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படும் மாணவர்கள், பாடசாலை வளாகத்தில், தனிநபர் இடைவெளி கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுவதுடன், ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றானர்.

ஜூன் மாதம் நடக்க இருந்த கல்லூரி நுழைவுத்தேர்வுகள், கொரோனா தாக்கத்தால், ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி ஆண்டு மாணவர்களை, தேர்வுக்கு தயார் செய்வதற்காக, பாடசாலைகள் செயல்படத் தொடங்கின.

ஆசிரியர்