
சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலும் தனது உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
சீனாவில் இருந்து அந்நிறுவனம் பெரிய அளவில் உற்பத்தியை இடம் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்து தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சாத்தியமானால், இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஐபோன் நிறுவனம் திகழும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.