Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அப்பாவி சிறுவர்களை தன் வன்மத்திற்கு பரிசாக்கிய வடகொரியா

அப்பாவி சிறுவர்களை தன் வன்மத்திற்கு பரிசாக்கிய வடகொரியா

2 minutes read

தென் கொரியா நாடகங்களை பார்வையிட்டதென அற்ப காரணத்தை கூறி சிறுவர்கள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.

வடகொரியா -தென்கொரியா ஒரே இனம் ஒரே மொழி பேசும் மக்களாக இருந்த போதும் அவர்கள் தம்மிடையே வன்மத்தையும் முரண்பாடுகளையும் முரண்பட்ட உறவுகளையும் பேணி வருகின்றனர் .

ஏன் இந்த முரண்பாடு 1945 ஆம் ஆண்டு காலத்தில் ஒன்றிய கொரியாவாக இருந்து ஜப்பானின் காலணித்துவத்தில் இருந்து விடுதலை பெற்று அதன் பின் வடபகுதியில் சோவியத் ஆதிக்கமும் தென்பகுதியில் அமெரிக்க அதிக்கமும் பரவ தொடங்கியது பின் நடந்த பனி போரின் பின் வடகொரியா தென் கொரியா என்று முழுமையாக பிரிந்தது.

கம்யுனிச வழியில் சர்வாதிகாரத்தை கையில் எடுத்தது .தென் கொரியா அமெரிக்காவின் பின்பற்றலின் கீழ் முதலாளித்துவத்தை கையில் எடுத்தது .

1980களுக்கு பிறகு வடகொரியா அணுவாயுத பரிசோதனை , ஏவுகணை பரிசோதனை , தொடர் இராணுவ படைபலம் அதிகரிப்பு என இருக்க தென்கொரியா இராணுவ படைபலத்தை அதிகரித்ததுடன் தொழிற்சாலைகளையும் நிறுவியது.தொடர்ந்து அணுவாயுத ஒப்பந்தத்தை மீறியதால் உறவு மிக மோசமானது.

இருப்பினும் தென்கொரியா குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தியதை அடுத்து வடகொரியா அதன் வீரர்களை அங்கே அனுப்பிவைத்ததை தொடர்ந்து சுமுகமான நிலை காணப்பட்டது.

பின்னர் 2018 சிங்கப்பூரில் நடை பெற்ற உச்சி மாநாட்டில் இரு நாடுகளின் அதிபரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.இப்படி நல்லமுறையில் சென்று கொண்ட உறவு எந்த வித அறிவித்தலும் இன்றி மீண்டும் முடிவுக்கு வந்தது. இதற்கு இடையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்க் உன் இறந்து விட்டார் என்ற தகவலை tmz செய்தி ஊடகம் பரப்பிய நிலையில் அது பொய்யான செய்தி என்பதை சீனா மற்றும் வடகொரியா ஆதாரங்களுடன் நிரூபித்தது.

மேலும் வடகொரியா பல அயல் நாடுகளுடன் ஏவுகணை பரிசோதனை , கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என விண்ணில் ஏவி பரிட்சித்தது அதற்கு உதாரணம் ஜப்பான் மேல் செலுத்தப்பட்ட ஏவுகணை ஆகும். இப்படியாக எப்படியோ கருப்பு பட்டியல் நாடுகளிலும் தனக்கான இடத்தை பிடித்து கொண்டது.

திடீர் என தென் கொரியாவின் ஹாட்லைன் வசதியை 9 ஜூன் 2020 நிறுத்தியதுடன் தகவல் தொடர்புகள் அனைத்தையும் தடை செய்தது நாட்டு மக்களை வெளி உலகை தெரியாமல் வைத்து கொள்ள எத்தனித்தது.

மக்கள் அரச திட்டங்களை மதிக்கவில்லை என்றால் கடுமையான தண்டனைகளை விதித்தது அவ்வாறே தென்கொரியா சார்பில் ஒரு சட்டத்தை கடைப்பிடித்தது தென்கொரிய நாடகங்கள், திரைப்படங்கள் , பாடல்களை பார்க்கவோ கேட்கவோ கூடாது என்பதே அதுவாகும். அதை மீறி சிலர் தம் கதவுகளை அடைத்து திருட்டுத்தனமாக பார்த்து வந்தனர். இத்தகைய புகாரில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் தென்கொரிய நாடகங்களை பார்த்ததாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 16 மற்றும் 17 வயதே ஆகும் நிலையில் அறியாமல் செய்த தவறுக்கு மக்கள் முன்னிலையில் வைத்து சுட்டு கொண்டமை உலக நாடுகள் அனைத்தினதும் கண்டனத்துக்கு உள்ளாகியத்துடன் உலக மனித உரிமை மீறல் இயக்கத்தின் கடுமையான கண்டனத்தையும் பெற்று வருகிறது .

இந்த இரக்கம் அற்ற செயல் தென் கொரியா மீதான வன்மத்தை காட்டுவதாக உள்ளது . இதனால் பாரிய விளைவுகளை வடகொரியா சந்திக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More