உக்கிரம் அடைந்துள்ள கொரோனா!

உலகில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதனால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

இந்திய நேரம் மதியம் 3.30 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இதேபோல் பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 85 ஆயிரத்தை கடந்திருந்தது.

உலகில் மிகவும் அதிகப்பட்சமாக அமெரிக்காவில் 8 லட்சத்து 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 47 ஆயிரம் பேர் பலியாகியிருந்தனர். இதையடுத்து ஸ்பெயினில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இத்தாலியில் 25 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 22 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 17 லட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதேபோல் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, பல்வேறு நாடுகளிலும் 7 லட்சத்து 27 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 58 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்