கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காத வகையில் புதிய தலைக்கவசத்தை கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.
இந்த ஹெல்மட்டில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் நமது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை நாமே தொடமுடியாத வகையிலும் இந்த ஹெல்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயோவைஸர் 1.0 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கவசம், பொது விற்பனைக்கு வரும் போது இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த ஹெல்மட் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.