கொரோனாவுக்கு சொரியாசிஸ் தடுப்பு மருந்து…..

தோலில் ஏற்படும் சொரியாசிஸ் படைநோய்க்கு கொடுக்கப்படும் இட்டோலிசுமாப் (Itolizumab) மருந்தை, தீவிர பாதிப்புள்ள கொரோனோ நோயாளிகளுக்கு, அவசர சூழல்களில், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிதமான அல்லது தீவிர சுவாச மண்டல பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு செல்களால் சுரக்கப்படும் சைட்டோகைன் எனப்படும் மூலக்கூறுகள், மிதமிஞ்சிய அளவில் வெளிப்படும்போது, அதுவே நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. இதுபோன்ற நிலையை குணப்படுத்த, அவசர சூழலில், கட்டுப்பாட்டுடன் இட்டோலிசுமாப் மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், நெஞ்சக மருத்துவ நிபுணர்கள், மருந்தியல் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ வல்லுநர் குழு, இந்த மருந்தை பயன்படுத்தலாம் என ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இட்டோலிசுமாப் மருந்தை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைவர் Dr V G Somani அனுமதி வழங்கியுள்ளார்.

ஆசிரியர்