தமிழகத்தில் 110 பேர் ஒரு நாளில் கொரோனாவால் மரணம்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர். 110 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 4571 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனையில் 22 பேர், அரசு மருத்துவமனையில் 88 பேர் ஆகும்.

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 67,153 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 65,062 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.இதுவரை 30,20,714 மாதிரிகளும், 29,10,468 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆசிரியர்