இந்திய விமானங்களுக்கு ஹொங்கொங் நிர்வாகம் தடை!

ஏயார் இந்தியா சிறப்பு விமானங்கள் மற்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்களுக்கு ஹொங்கொங் நிர்வாகம்  தடை விதித்துள்ளது.

குறித்த தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து 14ம் திகதி ஹொங்கொங் வந்த விமானத்தில் பயணித்தவர்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்தே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்