கொரோனாவில் இருந்து மீண்ட மகிழ்ச்சியை இப்படியா வெளிப்படுத்துவது

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வார்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் ஒன்றாக குத்தாட்டம் போட்டது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

காட்னி மாவட்டத்தில் உள்ள கொரோனா மையத்திலே இக்கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

வீடியோவில், மருத்துவமனை வார்டில் 10 பேர் பாட்டு பாடிய படி பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவதை காட்டுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே நேரத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளனர்.

8 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு மேற்கொண்ட சோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

இதை கொண்டாடும் வகையில் அவர்கள் வீடு திரும்பும் முன் மருத்துவமனையிலே ஒன்றாக பாட்டு படி நடனமாடி கொண்டாடியுள்ளனர்.

ஆசிரியர்